- மூளைக்கு வல்லாரை
- முடிவளர நீலிநெல்லி
- ஈளைக்கு முசுமுசுக்கை
- எலும்புக்கு இளம்பிரண்டை
- பல்லுக்கு வேலாலன்
- பசிக்கு சீரகமிஞ்சி
- கல்லீரலுக்கு கரிசாலை
- காமாலைக்கு கீழாநெல்லி
- கண்ணுக்கு நந்தியாவட்டை
- காதுக்கு சுக்குமருள்
- தொண்டைக்கு அக்கரகாரம்
- தோலுக்கு அருகுவேம்பு
- நரம்பிற்கு அமுக்குரான்
- நாசிக்கு நொச்சிதும்பை
- உரத்திற்கு முருங்கைப்பூ
- ஊதலுக்கு நீர்முள்ளி
- முகத்திற்கு சந்தனநெய்
- மூட்டுக்கு முடக்கறுத்தான்
- அகத்திற்கு மருதம்பட்டை
- அம்மைக்கு வேம்புமஞ்சள்
- உடலுக்கு எள்ளெண்ணெய்
- உணர்ச்சிக்கு நிலப்பனை
- குடலுக்கு ஆமணக்கு
- கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
- கருப்பைக்கு அசோகுபட்டை
- களைப்பிற்கு சீந்திலுப்பு
- குருதிக்கு அத்திப்பழம்
- குரலுக்கு தேன்மிளகே!
- விந்துக்கு ஓரிதழ்தாமரை
- வெள்ளைக்கு கற்றாழை
- சிந்தைக்கு தாமரைப்பூ
- சிறுநீர்க் கல்லுக்கு சிறுகண்பீளை
- கக்குவானுக்கு வசம்புத்தூள்
- காய்ச்சலுக்கு நிலவேம்பு
- விக்கலுக்கு மயிலிறகு
- வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி
- நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
- நீரிழிவுக்கு ஆவாரைக்குடிநீர்
- வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
- வெட்டைக்கு சிறுசெருப்படையே
- தீப்புண்ணுக்கு குங்கிலியவெண்ணெய்
- சீழ்காதுக்கு நிலவேம்பு
- நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
- நஞ்செதிர்க்க அவரிஎட்டி
- குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
- குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
- பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
- பெருவயிறுக்கு மூக்கிரட்டை
- கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
- கழிச்சலுக்கு தயிர்சுண்டை
- அக்கிக்கு வெண்பூசனை
- ஆண்மைக்கு பூனைக்காலி
- வெண்படைக்கு பூவரசு கார்போகி
- விதைநோயா கழற்சிவிதை
- புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
- புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
- கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
- கரும்படை வெட்பாலைசிரட்டை
- கால்சொறிக்குவெங்காரபனிநீர்
- கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
- உடல்பெருக்க உளுந்துஎள்ளு
- உளம்மயக்க கஞ்சாகள்ளு
- உடல்இளைக்க தேன்கொள்ளு
- உடல் மறக்க இலங்கநெய்யே
- அருந்தமிழர் வாழ்வியலில்
- அன்றாடம் சிறுபிணிக்கு
- அருமருந்தாய் வழங்கியதை
- அறிந்தவரை உரைத்தேனே!
- இந்திய மருத்துவம்,
ஹோமியோபதி துறை,
சித்த மருத்துவப் பிரிவு, பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


