அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

காலங்களில் அவள் வசந்தம்

புதுமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் எழுதி, இயக்கி வரும் படம் "காலங்களில் அவள் வசந்தம்'. கௌசிக் ராம், அஞ்சலி நாயர், ஹெரோசினி,  விக்னேஷ் காந்த், அனிதா சம்பத், ஜெயா சாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

News image
Updated On :23 அக்டோபர் 2022, 12:30 am

புதுமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் எழுதி, இயக்கி வரும் படம் "காலங்களில் அவள் வசந்தம்'. கௌசிக் ராம், அஞ்சலி நாயர், ஹெரோசினி,  விக்னேஷ் காந்த், அனிதா சம்பத், ஜெயா சாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""கடந்து போன காலங்கள்தான் முக்கிய அம்சம் பெறுகிறது. அதிலும்  காதல். அதிலும் திருமணத்துக்குப் பிந்தைய காதல் இன்னும் பெரிய அனுபவம். ஆன்மிக அனுபவம் எனக் கூட சொல்லலாம்.  காதல் மட்டும் அல்ல; எந்தத் தீவிரமான உணர்வும் ஆன்மிகத்துக்கான முதல் திறவுதான்.  கடந்த காலத்தில் நம்    வாழ்வை அழகாக்கிய உறவை மீட்டெடுப்பது ஒரு வேளை விபரீதத்தில் முடிந்தால், அதன்பின் வரும் இடர்களை எதிர்கொள்வதற்கு என்ன விதமான பக்கபலம் ஒருவருக்குத் தேவைப்படுகிறது என்பதே கதை. சதா இரை தேடி அலையும் மானுடம், காகம் போல் கரையும் மனம். ஜனத்திரட்சி, நெரிசல் காடு, எப்போதும் பரபரப்பு, தாளாது விம்மும் எண்ணங்கள்,  தூக்கத்திலும் துரத்தும் தொலைக்காட்சி விவாதங்கள்... இன்னும் எவ்வளவோ இருக்கிறது இங்கே. இவற்றுக்கு நடுவே ஒரு சாராசரி மனிதன். அவன் மனைவி, குடும்பம்... கனவுக்கும் எதார்த்தத்துக்குமான பயணம். இதுதான் இந்தப் படம். நான்கு காலக் கட்டங்களில் நடந்து முடிகிற ஒரு சினிமா இது'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.