காது கேட்கும் திறன் இழந்த இளைஞர் கார்த்திக் குங்கும சீனிவாசன் , 10,000 கி.மீ. தூரம் தனியாக பைக்கில் சாகசப் பயணம் செய்துள்ளார்.
இவர் ஜூலை 3-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு கேரளா, கோவா ராஜஸ்தான், பஞ்சாப் பிறகு லடாக் சென்று நாக்பூர், ஹைதராபாத், சென்னை வழியாக தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு ஆகஸ்ட்21-இல் வந்து சேர்ந்தார்.
இவர் தனது பயண அனுபவம் குறித்து கூறியதாவது:
""நான் மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவன். உலகிலேயே 19,024 அடி உயரத்தில் அமைந்த மிகவும் ஆபத்தான பாதையில் அமைந்துள்ள "உம்ல்லிங் லா' சென்று வந்த முதல் மாற்றுத்திறனாளி என்ற பெருமையும் எனக்கு உண்டு.
பயணத்தின் உச்ச கட்டம் காஷ்மீர் "கிஸ்த்வார் முதல் கிலாங்' வரை உள்ள 120 கிலோ மீட்டர் தூரம் கொண்ட உலகின் அபாயகரமான சாலையை கடப்பதுதான். இந்தத் தூரத்தைக் கடக்க மூன்று நாள்களில் சுமார் 26 மணி நேரம் பிடித்தது. ஆறு அடி அகலமான கரடு முரடான மலைப்பாதை. ஒருபுறம் வானத்தைத் தொடும் மலை.
இன்னொருபுறம் செங்குத்தாக இறங்கும் ஆழமான பள்ளத்தாக்கு. சின்ன தவறு நிகழ்ந்தால் கூட பள்ளத்தாக்கில் செங்குத்தாக விழ வேண்டும். இங்கே தினமும் குறைந்தது எட்டு விபத்துகள் நடக்கும்.
தொடர்ந்து மூன்று நாள்கள் அலைபேசியில் நான் தொடர்பு கொள்ளாவிட்டால் நான் இறந்துவிட்டதாக நினைத்த்துக் கொள்ளுங்கள் என்று நான் கிளம்பும்போதே வீட்டில் சொல்லிவிட்டு வந்தேன்.
லடாக் பகுதியில் பேட்டரி போட்ட அரை மணி நேரத்தில் பேட்டரியின் சக்தி தீர்ந்துவிடும். இருப்பினும், ஐந்து பாக்கெட் பேட்டரிகளைக் கொண்டு போனதால் அவற்றை உடனுக்குடன் மாற்றி சமாளித்தேன்.
முதலில் கடல் மட்டத்திலிருந்து 15,547 அடி உயரத்தில் இருக்கும் "நகீலா' என்ற இடத்துக்கு பைக்கில் பயணித்தேன். பிறகு 18380 அடி உயரத்தில் இருக்கும் ‘கார்டுங்ளா' உச்சிக்குப் பயணித்தேன். அங்கே சென்ற போது "கார்டுங்ளா'வுக்கு மேலே "உம்லிங் லா' என்ற உச்சி கடல் மட்டத்திலிருந்து 19,024 அடி உயரத்தில் உள்ளது. பாதை வசதி "உம்ல்லிங் லா' வரை மட்டுமே உள்ளது . பயணங்கள் முடியாது, தொடரும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


