"நோபல் பரிசு பெறுவதை லட்சியமாகக் கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிகிறேன்'' என்கிறார் பேராசிரியர் தி.தெய்வசாந்தி.
ராஜபாளையத்துக்கு அருகேயுள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த தெய்வசாந்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிகிறார். அறிவியல் கருத்தரங்குகளில் உரையாற்றுவதற்காக, மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களுக்கும் சென்று வந்திருக்கிறார். இவர் 5 அறிவியல் நூல்களையும், 30 ஆராய்ச்சிக் கட் டுரைகளையும் எழுதியிருக்கிறார். நானோ தொழில்நுட்பம் தொடர்பாக, 2015, 2016 , 2017 ஆகிய ஆண்டுகளில் 4 முறை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
சாதனைகள் குறித்து அவரிடம் கேட்டபோது:
"பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமாகிவருகின்றன. அத்தகைய வாகனங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
மின்கலன் எனப்படும் பேட்டரியின் விலை அதிகமாக இருப்பதுதான். இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கும், கைப்பேசிகளுக்கும் குறைந்த விலையில் அதிக ஆயுள் உள்ள ‘மாற்று மின்கலன்' கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்.
"லித்தியம் சல்பர் பேட்டரி'-ஐ உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இதுதொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்காக மத்திய அரசு என்னைத் தேர்வு செய்து ரூ.15 லட்சம் நிதியுதவியும் அளித்திருக்கிறது. இந்த பேட்டரியில் பயன்படுத்தப்படும் "கிராஃபின்' புதிய ரக அமிலத்தைக் கண்டுபிடித்துள்ளேன். இன்னும் அதிக மின் சக்தி தரும்விதமாக தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறேன்.
உலகின் மிகச் சிறிய தொற்றுகளுக்கு எதிரான நிலவேம்பு (ஆன்ரோகிராபிஸ் பனிகுலேட்டா) இலைகளிலிருந்து நானோ துகள்களை உருவாக்கியிருக்கிறேன். இதை உட்கொண்டால் நிலவேம்பு கஷாயம் காய்ச்சலை மாற்ற எடுக்கும் நேரத்தைவிட குறைந்த கால அளவில் உடல் சுகவீனத்தை குணப்படுத்தும். கரோனா தொற்றுகளுக்கு எதிரான குறைந்த விலை நெகடிவ் அயன் ஜெனரேட்டர் கருவியை கரோனா தாக்கத்தின்போது கண்டுபிடித்தேன்.
இந்தக் கருவியை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். 12 வோல்ட் மின்சாரத்தில் செயல்படும் கருவியிலிருந்து வெளிப்படும் அயனிகள் காற்றுடன் வினை புரியும்போது உருவாகும் நுண் துகள்கள் ஒருவரைச் சுற்றியுள்ள கரோனா நுண் கிருமிகளை செயல் இழக்கவைக்கின்றன. இதைப் பயன்படுத்துவதால் பயன்படுத்துபவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. தாவரங்களில் உயிர் பற்றிய சர் ஜகதீஸ் சந்திர போஸ் கண்டுபிடிப்புக்குப் பின்பு, தாவரப் பொருள்களில் காந்தத் தன்மை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டேன்.
இந்தியாவில் முதன் முறையாக, புற்றுநோய்க்கான ஹைபர்தெர்மியா சிகிச்சைக்காக தாவர பாரா மேக்னடிக் பொருள்கள்களைப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்துள்ளேன். இந்த சிகிச்சையில் பக்கவிளைவு ஏதும் இருக்காது. இந்தக் கண்டுபிடிப்பை புற்றுநோயாளிகளுக்குப் பயன்படுத்துவது குறித்தது சென்னை புற்றுநோய் நிலையத்தின் உதவி கேட்க உள்ளேன். நோபல் பரிசு பெறுவதை லட்சியமாகக் கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிகிறேன்'' என்றார் தெய்வசாந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


