இசையமைப்பாளராக இருந்து ஹீரோ ஆனவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. ஆல்பம் முதல் சினிமா படங்கள் வரை இசை அமைப்பது, பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பது என்று அமோக வளர்ச்சியில் இருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்த மீசையை முறுக்கு, நட்பே துணை, சிவகுமாரின் சபதம், அன்பறிவு உள்ளிட்ட படங்களுக்கு பரவலான வரவேற்பு எழுந்தது. தற்போது மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏஆர்கே சரவணன் இயக்கி வரும் வீரன் படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்காக குதிரை ஏற்றம் உள்ளிட்ட பயிற்சிகளை கற்று வருகிறார்.
அந்த குதிரையின் பெயர் ரீகன். இந்த நிலையில் மற்றுமொரு முயற்சியாக ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள சின்ன பையன் என்ற ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆல்பம் மூலம் தொடர்ந்து சுதந்திர இசை கலைஞர்களை பெருவாரியான ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் அடுத்தடுத்து சுயாதீன ஆல்பம் வெளியிட ஹிப்ஹாப் தமிழா ஆதி முடிவு செய்துள்ளார். "" என் வாழ்க்கையின் பெரிய ஆச்சர்யப் பரிசு இந்த இடம். பெரிய திட்டமிடல்கள் இல்லாமல் வந்தேன். ஆனால், நான் செய்த வேலைகள் ரசிகர்களுக்கு பிடித்து விட்டது. எல்லாமே அவர்கள் கொடுத்ததுதான்.
அடுத்து என்னை போலவே மேலே வர முயற்சிக்கும் இசைக் கலைஞர்களை இதன் மூலம் வெளிச்சம் போட்டு காட்டுவேன். இது ரசிகர்கள் எனக்கு கொடுத்த உயரத்துக்கு செய்யும் நன்றி கடன் என்று கூடச் சொல்லலாம்'' என்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெங்காயம் சூட்டைத் தணிக்குமா? சொல்கிறார் பாஜக அமைச்சர்

மே 15-ல் வெளியாகிறது இயக்குநர் சற்குணத்தின் புதிய இணையத் தொடர்!

பொல்லாத ஆசைகள்... 29 படத்தின் புதிய பாடல் வெளியானது!

ஐபோன் 17 வாங்க சிறந்த இணைய விற்பனை தளம் எது? எவ்வளவு தள்ளுபடி?
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


