இந்தியா சுதந்திரம் அடைந்தபோது உடனடி தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால் விடியற்காலை பொழுதில் மக்களின் ஆரவாரம் மூலம்தான் அறிய முடிந்தது என்றார் தியாகி ஈ.வி.நாராயணசாமி (99).
ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட ஏலகிரி கிராமத்தில், அவர் தனது மனைவி நாச்சியம்மாளுடன் குடிசை வீட்டில் வசித்துவருகிறார். இவர்களுக்கு 4 ஆண்கள், ஒரு பெண் பிள்ளைகள்.
அகில இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள், வாரிசுதாரர்கள் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்டத் தலைவராகவும் உள்ள இவர், ஓய்வு நேரத்தில் சுதந்திரப் போராட்டம் குறித்து விளக்கிப் பேசுகிறார். அவரிடம் பேசியபோது:
""1942-43-ஆம் ஆண்டில் " வெள்ளையனே வெளியேறு' என்ற இயக்கத்தில் பலரும் பங்கேற்றோம். அதற்காக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம்.
சுமார் 4 அடிக்கும் குறைவான உயரம் கொண்டது சிறைச்சாலை வாயில். இரவு தூங்கும்போது தரையில் தண்ணீர் ஊற்றி விடுவார்கள். "சி.ஜே.' என கழியில் பெயரிடப்பட்டிருக்கும். அதாவது சென்ட்ரல் ஜெயில் என்பதற்கு அர்த்தம் ஆகும்.
சுதந்திரம் அடைந்தபோது உடனடி தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால் விடியற்காலை பொழுதில் மக்களின் ஆரவாரம் மூலம்தான் அறியமுடிந்தது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


