திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பெயர் மாறிய புத்தர்

வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம் என்னுமிடத்தில் ஒரு தனியார் தோப்பு ஒன்றில் அமர்ந்த நிலையில் ஒரு புத்தர் சிலை உள்ளது.

News image
Updated On :7 நவம்பர் 2021, 12:30 am

வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம் என்னுமிடத்தில் ஒரு தனியார் தோப்பு ஒன்றில் அமர்ந்த நிலையில் ஒரு புத்தர் சிலை உள்ளது. இதனை உள்ளூர் மக்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் என சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர். இது சுயம்பு, அசைக்க முடியாது எனவும் இந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். 

இதே போல் முசிறி வட்டத்தில் மங்கலம் என்ற ஒரு சிற்றுர் உள்ளது. இங்குள்ள அரவாண்டியம்மன் கோயிலில் தனியாக ஒரு புத்தர் சிலை உள்ளது. இதனையும் இந்த ஊர் மக்கள் செட்டியார் என்றே அழைக்கின்றனர். 

மேலும் மன்னார்குடி மதுக்கூர் அருகே விக்ரமம் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள புத்தர் சிலையையும் செட்டியார் என அழைக்கின்றனர்.  புதிய வேலையை தொடங்கும் முன் இவரிடம் வேண்டிக் கொண்டால் பலிதமாக்கித் தந்து விடுவார் என்பது நம்பிக்கை. இதனால் புத்தரை இங்கு ஆர்வமாக கும்பிடுகின்றனர்.

திருவாரூர் அருகே திருநெல்லிக்காவல் பகுதியில் புதூர் என ஒரு சிற்றார் உள்ளது. இங்கு தான் இவரை புத்தர் என அழைக்கின்றனர். இவரை தற்போது அரசமரத்தடியில் அமர்த்தி வழிபடுகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.