/

புதிய மருந்து கண்டுபிடிப்பு!

கரோனா  தாக்கத்தின் இரண்டாம் நிலையின் தீவிரம்   இந்தியாவை  சர்வதேச அரங்கில் பேசும் பொருளாக மாற்றியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:20 pm

சுதந்திரன்

கரோனா தாக்கத்தின் இரண்டாம் நிலையின் தீவிரம் இந்தியாவை சர்வதேச அரங்கில் பேசும் பொருளாக மாற்றியுள்ளது. தவிர பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி, நாடு முழுவதும் படு வேகமாகப் பரவிவரும் கரோனா இரண்டாம் அலையுடன் மூன்றாம் நான்காம் அலையை எதிர்கொள்ளவும் தயாராகுங்கள்... மூன்றாம் அலை கரோனா, குழந்தைகளை குறி வைக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கரோனா தொற்று ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளுக்கு "ரெம்டெசிவிர்' நேரடி கரோனா எதிர்ப்பு அல்லது தடுப்பு மருந்து இல்லை என்றாலும் "ரெம்டெசிவிர்' மருந்தின் தேவை பொதுமக்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் "ரெம்டெசிவிர்' மருந்திற்கு கடும் தட்டுப்பாடு தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது.

கோவிஷீல்டு, கோவாக்ஸின் போன்ற தடுப்பு ஊசி மருந்துகளுக்கும், நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் போது தரப்படும் ஆக்சிஜனுக்கும், மாபெரும் தட்டுப்பாடு உள்ள நிலையில், "ரெம்டெசிவிர்' மருந்து தட்டுப்பாடும் சேர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு பல வித நெருக்கடிகளை, தர்ம சங்கடங்களை, தலைவலிகளைத் தந்து வருகிறது.

இதற்கு எல்லாம் முடிவு கட்டும் விதமாக இந்தியாவில் கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு அதை சரிவரக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய மருந்தின் பெயர். சுருக்கமாக "2-ஈஎ' என்று அழைக்கப்படுகிறது. சூர்ணம் போல் பொடி அல்லது தூள் வடிவில் இருக்கும் "2 டி ஆக்ஸி டி குளுகோஸ்'ûஸ (இந்திய) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (ஈதஈஞ) ஆய்வகமான "இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிஸின் அண்ட் அலைய்ட் சயின்ஸஸ்', முன்னணி மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டி ஆய்வகத்துடன் இணைந்து தயாரித்திருக்கின்றன.

"2 டி ஆக்ஸி டி குளுகோஸ்' மருந்துத்தூளை தண்ணீரில் கலந்து நோயாளி குடித்தால் போதும். மருந்தின் மூலக்கூறுகள் உடலுக்குள் போய், கரோனா வைரஸ் எங்குள்ளது என்று கண்டுபிடித்து அதை முற்றுகை இட்டு மேலும் வளர விடாமல் கிடுக்கிப்பிடி போடும். கரோனா கிருமிகளின் வீரியத்தைக் குறைக்கும். நோயாளின் ஆக்ஸிஜன் தேவையையும் குறைத்துவிடும்' என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"2 டி ஆக்ஸி டி குளுகோஸ்' மருந்தின் மூன்று கட்ட சோதனை முடிந்து, அவசரகால ஒப்புதலையும் இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது. "2 டி ஆக்ஸி டி குளுகோஸ்' அறிமுகம் ஆகியுள்ளதால் கரோனா நோயாளிகளை குணப்படுத்திவிடலாம் , மரணத்திலிருந்து காப்பாற்றிவிடலாம் என்று சொல்லப்படுகிறது.

கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் ‘2 டி ஆக்ஸி டி குளுகோஸ்' மருந்தை குடிக்கச் செய்து , கரோனா தொற்று உண்டா இல்லையா என்று சோதிக்க எடுக்கப்படும் "ஆர்.டி - பி. ஸி.ஆர்' பரிசோதனையில், "கரோனா தொற்று இல்லை' என்பதாகத் தெரியவந்துள்ளது.

தற்போது நாட்டில் கரோனா தொற்று குறித்து ஏற்பட்டிருக்கும் பீதி, பயம், நெருக்கடி.. மற்றும் "உயிர் போய் விடுமோ' என்ற அச்சத்தைக் குறைக்கும் வகையில் வாய்வழி எடுத்துக்கொள்ளப்படும் தடுப்பு மருந்தான "2 டி ஆக்ஸி டி குளுகோஸ்' அமைந்துள்ளது. சாஷே வடிவிலான பாக்கெட்களில் விற்பனை ஆவது போல், சின்ன பாக்கெட்டுகளில் இந்த மருந்து மே 17 - லிருந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

கரோனா நோயாளிகள் 2 ஈஎ தூளை ஒரு நாளில் இரண்டு வேளை தண்ணீரில் கலந்துகுடிக்க வேண்டும். முதல் ஏழு நாள்கள் இதனை குடிக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.