லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

டிரம்ப்  புத்தர்!

அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து  டிரம்ப் இறங்கி இரண்டு மாதங்கள்   ஆனாலும் அமெரிக்கா  டிரம்பை மறந்துவிட்டது.

News image
Updated On :28 மார்ச் 2021, 12:30 am

அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து டிரம்ப் இறங்கி இரண்டு மாதங்கள் ஆனாலும் அமெரிக்கா டிரம்பை மறந்துவிட்டது. ஆனால் டிரம்பை சீனா மறக்கவில்லை. சீனாவைச் சேர்ந்த தொழில்முனைவர் ஒருவர் டிரம்ப்பை புத்தராக மாற்றி சிலை செய்து விற்பனைக்கு விட, "டிரம்ப் சிலை படம்' வலைத்தளங்களில் வைரல் ஆகியிருக்கிறது.

சிலைகளும் ஆன்லைனில் விற்பனை ஆகிவருகின்றன. .

டிரம்ப் வெண்ணிற உடை அணிந்து, புத்தர் போல்சம்மணமிட்டு அமர்ந்து தியானம் செய்வதாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாலரை மீட்டர் உயரமுள்ள டிரம்ப் சிலையின் விலை சுமார் 45ஆயிரம் ரூபாய். ஒன்றரை மீட்டர் உயரமுள்ள டிரம்ப் சிலையின் விலை சுமார் 11ஆயிரம் ரூபாய். இந்த டிரம்ப் புத்தர் சிலையை அலுவலகத்தில் வைத்தால், உங்கள் நிறுவனம் மளமளவென்று முன்னேறும் என்ற விளம்பர வாக்கியத்தையும், சிலையை ஆன்லைனில் விற்கும் சீன மின் வணிக தளமான "தாவோபாவ்' உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.