நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

புத்தரின் நவீன வடிவம்  காந்தி

ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க மகாத்மா காந்தி விடுத்த அழைப்புக்கு செவிகொடுத்த ஏராளமானோர் சுதந்திரப்போராட்டத்தில் குதித்தனர்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:40 am

ந.முத்துமணி


ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க மகாத்மா காந்தி விடுத்த அழைப்புக்கு செவிகொடுத்த ஏராளமானோர் சுதந்திரப்போராட்டத்தில் குதித்தனர். அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமல்லாது, சமூக சேவகர்கள், வழக்குரைஞர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் தவிர, ஓவியர்களும் சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றத் தொடங்கினர். அவ்வாறு பங்காற்றிய ஓவியர்களில் முதன்மையானவர் உபேந்திர மகாரதி. 

1908-ஆம் ஆண்டு ஒடிசாவின் சிறு கிராமத்தில் பிறந்த உபேந்திர மகாரதி, 1925-இல் அரசு கவின்கலை மற்றும் கைவினை கல்லூரியில் சேர்ந்து படித்தார். இக்கல்லூரியில் மேற்கத்திய மற்றும் இந்திய கவின்கலை, கைவினை, கட்டடக்கலையின் நுணுக்கங்களைக் கற்றார். 

பின்னர், தேசிய உணர்வுடன் ஓவியக்கலையைக் குழைத்து சுதந்திர வேட்கையை  ஓவியங்களாகச் சித்திரித்தார். காந்தியின் அகிம்சை அரசியலை ஓவியங்களாகத் தீட்டி பிரசாரம் செய்தார். 

1940-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புவாய்ந்த காங்கிரஸ் மாநாட்டின் பந்தலை இந்திய பண்பாட்டை விளக்கும் வகையில் வடிவமைத்திருந்தார். 

புத்தரின் தத்துவங்கள், சிந்தனைகளில் தனி ஈர்ப்பு கொண்டிருந்த மகாரதி, மகாத்மா காந்தியில் புத்தரைக் காண்கிறார். புத்தரின் நவீன வடிவமாக மகாத்மா காந்தியைக் கண்ட உபேந்திர மகாரதி, அதை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களைப் படைத்திருக்கிறார். 

ராம்கர்க் காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தியோடு ஏற்பட்ட அறிமுகம், அவரை பல்வேறு கோணங்களில் ஓவியங்களாக வடிக்க உதவியாக இருந்துள்ளது. பிகார் அரசில் தொழில்துறையில் சிறப்பு வடிவமைப்பாளராகப் பணியில் சேர்ந்த பிறகு, கலை, கைவினை, வடிவமைப்பை ஒற்றைப்புள்ளியில் கொண்டு புதிய ஆக்கங்களைப் படைக்க கைவினைஞர்களை ஊக்குவிக்கத் தொடங்கினார். 

நாட்டுப்புறக்கலை மற்றும் கைவினைவடிவமைப்புகளை மீட்டெடுக்க புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டார். இதற்காக 1956-ஆம் ஆண்டு பாட்னாவில் தொழில் ஆராய்ச்சி மையத்தை அமைத்தார். 

இந்த மையத்தின் மூலம் கட்டடங்கள், ஆடைகள், கைவினைப்பொருட்களை புதுமையாக வடிவமைத்தார்;  மர வேலைப்பாடுகள், புதிய கோணங்களில் மூங்கில் கலை வடிவங்களை உருவாக்கினார். சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் உள்ளிட்ட அனைத்துவகையான ஆடைகளில் நாட்டுப்புறக்கலையின் படிமங்களைக் கொண்டுவந்து, அக்கலைகளை மீட்டெடுக்க உதவியாக இருந்தார். 

ஜப்பானிய, சீன, நாளந்தா காலத்து ஓவியங்கள் அனைத்தையும் தனது படைப்பாக்கத்தில் ஓவியங்களாகப் புனைந்திருக்கிறார். மூங்கிலால் கூடை, முடையும் கலையையும் அவர் விட்டுவைக்கவில்லை. கோட்டோவியம் முதல் வண்ணக்கலவை ஓவியம் வரை அனைத்து வகையான கலை வடிவங்களையும் கற்று, அதை தனது கற்பனையில் வடித்துவைத்திருக்கிறார். 

73 ஆண்டுகள் வாழ்ந்து 1981-ஆம் ஆண்டு மறைந்த உபேந்திர மகாரதியின் கலை ஓவியங்கள் பொதுவெளியில் அறியப்படாமல் இருக்கின்றன.  

உபேந்திர மகாரதியின் ஓவியங்களை இளம் தலைமுறையிடம் அறிமுகப்படுத்தும் வகையில், அவரது கற்பனையில் உதித்த புத்தர், காந்தியைப் பற்றிய புதுமையான ஓவியங்கள், நாட்டுப்புறக்கலை வடிவங்கள், ஆடைகள் வடிமைப்புக்குத் தேவையான ஓவியங்கள் என ஆயிரக்கணக்கான படைப்புகளை பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரும் முயற்சியை பெங்களூரில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம் செய்துள்ளது. 

இந்த அமைப்பு, "உபேந்திர மகாரதி: நிலையானதை நாடுபவர்" என்ற தலைப்பிலான ஓவியக் கண்காட்சியை பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவைத்துள்ளது. சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் இக்கண்காட்சியில் உபேந்திர மகாரதியின் முழுமையான கலைவண்ணத்தைக் காண முடியும். இது குறித்து கலைக்கூடத்தின் இயக்குநர் நாசினி பானு கூறியதாவது:

இந்திய ஓவியக்கலை வரலாற்றில் அழிக்கமுடியாத தடத்தை பதித்துள்ள உபேந்திர மகாரதியின் ஓவியங்களை இளம் தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக அவரது ஓவியங்களை பெங்களூரில் உள்ள கலைக்கூடத்தில் கண்காட்சியாக வைத்திருக்கிறோம். 

கயா- புத்தர் கோயிலில் இடம்பெற்றுள்ள அவரது ஓவியங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. உலக அளவிலான ஓவியங்களை ஒப்பிட்டு, அதில் இந்தியாவின் பாரம்பரிய, பண்டைய ஓவியக்கலையை உபேந்திர மகாரதி மீட்டெடுத்திருக்கிறார். 

நவம்பரில் திறக்கப்பட்ட இந்தக் கண்காட்சி, பிப்ரவரி மாதம் வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.