சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில்லை!

""எந்த ஒரு கதையாக இருந்தாலும், அந்தந்த கால கட்டத்தில் ட்ரெண்ட்டில் இருக்கும் சினிமா அம்சங்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

ஜி. அசோக்

""எந்த ஒரு கதையாக இருந்தாலும், அந்தந்த கால கட்டத்தில் ட்ரெண்ட்டில் இருக்கும் சினிமா அம்சங்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும். அப்போது தான் அது ரசிகர்களுக்கு அந்நியம் காட்டாமல் நெருங்கி வரும். ஹாலிவுட்டில் "அமெரிக்கன் பை', "ஸ்கேரி மூவி', "ஈவில் டெட்', "ஸ்பைடர் மேன்', "ஹேங் ஓவர்' மாதிரியான படங்கள்இப்படியான பாணியில்தான் வந்து ஹிட்அடித்தது. அப்படித்தான் இந்தப் படத்தை இயக்கி முடித்திருக்கிறேன். இப்போதைய சினிமா ட்ரெண்ட் ஹாரர். இதன் பின்னணியில் இந்தச் சமூகத்துக்குத் தேவையான, அதிஅத்தியாவசியமான ஒரு பிரச்னையைமுன் வைத்துக் கொஞ்சம் சிரிக்க வைப்பவர் தான் இந்த "பேய் மாமா.' தொடர்ந்து கமர்ஷியல்
தளங்களில் பயணிக்கும் ஷக்தி சிதம்பரம் இந்த முறை ஹாரர், காமெடியுடன் களத்துக்கு வருகிறார்.

அதி அத்தியாவசியமான பிரச்னை என்ன....

மருத்துவமும், கல்வியும்தான் உலகத்துக்கான தேவையாக எப்போதும் இருக்கிறது. மருத்துவத் தேவைகள் இன்னும் எளிய மக்களைச் சென்று சேராத நிலை. உலகிலேயே மிக அதிகமாக மருந்து உற்பத்தி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இங்கிருந்து 150 நாடுகளுக்கும் மேல் மருந்துகள் ஏற்றுமதி ஆகிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் 60 கோடிக்கும் மேலான மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில்லை. அந்த அறிக்கையின் உண்மைத்தன்மைக்குக் கோரக்பூரில் நிகழ்ந்த பச்சிளம் குழந்தைகளின் மரணங்களே சாட்சியாக இருக்கின்றன. ஏதோ இது மாதிரி சம்பவங்கள் எல்லாம் வட இந்தியாவில் மட்டும்தான் நடக்கும் என்று திருப்திப்பட்டுக்கொள்ள முடியாது. ஏற்கெனவே, சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொத்துக்கொத்தாகக் குழந்தைகள் இறந்ததைக் கண்டோம். இப்படியான பிரச்னைகள்தான் இதன் பேசு பொருள். இதற்கு நடுவே மருந்தே இல்லாத கரோனா வைரஸ்.

உலகத்தையே நடுநடுங்க வைத்த கரோனா வைரஸ் போன்ற பின்னணி.... அதன் சுவாரஸ்ம் இப்படித்தான் இந்தக் கதை போகும். வைரஸ் என்பது ஒரு தொற்று தான். ஆனால், அந்த கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியால் நமது மக்களுக்குள்ளேயே சில தவறான புரிந்துணர்வும் வரத் தொடங்கிவிட்டது. அந்த கிருமித் தொற்றுக்காக நம்முடைய மனிதத்தை எங்கும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்பதை அடிப்படையாக வைத்து பார்த்த போதுதான் இந்தக் கதை உருவாகி வளர்ந்தது. கரோனா என்கிற வைரஸ் பரவத் தொடங்குவதற்கு முன்பே இதைப் படமாக்கி முடித்து விட்டேன். ஆனால் இப்போது பொருந்தி வருகிற போது எங்களுக்கே ஆச்சரியம்.

சரி, இதை ஹாரர், காமெடி பாணி சினிமாவாகக் கொண்டு வருவதன் அவசியம் என்ன....

ட்ரெண்ட் தான் காரணம். நான் சொன்ன விஷயங்களை ஒரு வாழ்வியல் கதையாக சொன்னாலே எடுபடும்தான், ஆனால் ரசிகர்கள் விரும்புவது அப்போதைய ட்ரெண்ட் என்ன என்பதுதான். அதுதான் அதை ஹாரர் பாணிக்குள் நின்று சொல்ல விரும்புகிறேன். குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் கதை இது. காமெடிப் படம் என்றால், தியேட்டரில் பக்கத்தில் இருக்கிறவர்கள் சிரிக்கும் போதே நமக்கும் அந்தச் சிரிப்பு தொற்றிக் கொள்ளும்.

ஆனால், திகில் படத்தில் அந்தச் சிரிப்பை கொண்டு வர முடியாது. அதுதான் த்ரில்லர் படம் இயக்குவதில் இருக்கும் சவால். எல்லா மதங்களிலும் இருக்கிற சில பழக்க வழக்கங்களுக்குப் பின்னால் நிறைய அர்த்தம் இருக்கும். காரணம் நிறைய இருக்கும். அதைப் பற்றி யோசித்திருக்க மாட்டோம். இந்தப் படத்தில் அப்படியான சில பழக்கங்களைப் பற்றித் துணிச்சலாகப் பேசியிருக்கிறேன்.

முதலில் இது, வடிவேலுவுக்கு சொல்லப்பட்ட கதை என்ற பேச்சு இருந்தது....
இப்போது யோகிபாபு எப்படி ...

ஆமாம்... வடிவேலுவுக்குக் கதை சொல்லியிருந்தேன். அவரால் நடிக்க முடியாத சூழல். அவருடைய இடத்தில் யோகி பாபுவே இருந்தார். அவருக்கு சொன்ன போது, தயங்கினார். ""வடிவேலு சீனியர்... அவர் இடத்தில் நான் எப்படி...'' என்றார். அந்த பெருந்தன்மை பிடித்திருந்தது. ""முடியும்.... வாங்க'' என நம்பிக்கை கொடுத்து அழைத்து வந்தேன்.அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கிறார். யோகிபாபு ஒரு பிக் பாக்கெட் திருடன். அந்த வாழ்க்கையின் சம்பவங்கள் தான் படம்.

வெளிநாட்டு மருத்துவக் கம்பெனியுடன் சேர்ந்து கொண்டு இங்கே இருக்கிற ஒரு சிலர் ஒரு வைரûஸ மக்களிடையே பரப்புகிறார்கள். அந்த வைரஸýக்கான மருந்தும் அவர்களிடம் இருக்கும். ஆனால் அதை உடனே வெளியிடாமல் நோய் அதிகமாகப் பரவவேண்டும் என்று காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் தலைமுறை தலைமுறையாகச் சித்த மருத்துவச் சேவையை செய்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர் அந்த வைரஸýக்கு மருந்து கண்டுபிடிக்கிறார். இதை அறிந்த அந்த வெளிநாட்டு மருத்துவக்குழு அந்த சித்த மருத்துவக் குடும்பத்தையே கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களது ஆவி யோகிபாபுவுடன் சேர்ந்து எதிரிகளைப் பழிவாங்கி எப்படி மக்களை வைரஸிலிருந்து காப்பாற்றினார்கள், என்பதை முழுக்க முழுக்கக் காமெடி கலந்து கொண்டு வந்திருக்கிறேன். இப்படிக் கதையை வெளிப்படையாக சொல்ல ஒரேகாரணம். யோகி பாபுதான்.

ஏகபட்ட நடிகர்கள் தெரிகிறார்கள்...

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். கதையின் சூழல்களுக்கு ஏற்ப மாற வேண்டிய எல்லா இடங்களிலும் இவர்கள் பிரமாதம். மாளவிகா மேனன் அவருக்கு ஜோடி. எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், "நான் கடவுள்' ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, சீனிவாசன், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், "லொள்ளுசபா' மனோகர் இப்படி எல்லா இடங்களிலும் உங்களுக்குப் பரிச்சயமான முகங்கள். படமோ, காட்சியோ, கதையோ எதுவும் எங்கேயும்
அந்நியம் காட்டாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.