ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வீட்டிலிருந்தே சுற்றுலா!

உங்கள் வீட்டிலிருந்த படியே நீங்கள் ஊரை சுற்றலாம் என்றால் நம்ப முடிகிறதா? இந்த ஊரடங்கு நேரத்தில் இது சாத்தியமாகுமா? சாத்தியம் தான் என்கிறது இந்திய சுற்றுலாத்துறை. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:39 pm

தங்க.சங்கரபாண்டியன்

உங்கள் வீட்டிலிருந்த படியே நீங்கள் ஊரை சுற்றலாம் என்றால் நம்ப முடிகிறதா? இந்த ஊரடங்கு நேரத்தில் இது சாத்தியமாகுமா? சாத்தியம் தான் என்கிறது இந்திய சுற்றுலாத்துறை.

கோவிட்-19 இந்தியா மட்டுமின்றி உலக அளவில் மக்கள் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இயல்பாகவே சுற்றுலாத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுக்குள்ளிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்வது தடை செய்யப்பட்டிருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால், தொழில்நுட்ப வசதி இருப்பதால், இணைய வழியாக சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிப் பார்த்து, பின்னர் வரும் நாட்களில் நேரில் செல்வதற்காக திட்டமிடல் செய்திட முடியும். முன் எப்போதும் இல்லாத இது போன்ற சூழ்நிலையில், மக்களுக்கு இடையில் தொடர்புகளைப் பராமரிக்கவும், சீக்கிரமே நிலைமைகள் சீராகும் என்ற நம்பிக்கையை உருவாக்கவும் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, சுற்றுலா அமைச்சகம் அதன் "நமது தேசத்தைக் காணுங்கள்'- "தேக்கோ அப்னா தேஷ்' என்ற இணையவழி சுற்றுலாத் தொகுப்பைத் தொடங்கியுள்ளது.

பல இடங்களைப் பற்றிய தகவல்களை அளிப்பதாகவும், இந்தியாவின் அற்புதமான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பற்றியும் விரிவடைந்த தன்மையைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளன. இந்த நிகழ்ச்சிகள். முதலாவது நிகழ்ச்சியில் டெல்லியின் நீண்ட வரலாறு பற்றியது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

நினைவுச் சின்னங்கள், உணவுப் பழக்கங்கள், கலைகள், நடனங்களின் வகைகள், இயற்கைக் காட்சி அமைப்புகள், பண்டிகைகள் மற்றும் இந்திய நாகரிகத்தின் செறிவான விஷயங்களைக் கொண்டதாக இந்த நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட, அற்புதமான வரலாற்றை மேன்மைப்படுத்திக் காட்டுவதற்கு அமைச்சகம் முயற்சிகள் மேற்கொள்ளும் என்று சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.