அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம்லிங்கன் தன் மகனுக்கு என்ன கற்பிக்க வேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு விடுத்த வேண்டுகோள் கடிதம்:
யாரும் முற்றிலும் நேர்மையானவர் கிடையாது. உண்மையானவர்களும் கிடையாது. இதை அவனுக்குச் சொல்லுங்கள்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் கற்றுக் கொடுங்கள்.
பெருமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
மனம் விட்டுச் சிரிக்கும் ரகசியம் அவனுக்குத் தெரியட்டும்.
வெட்டிப் பேச்சுக்கு அடிமையாவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே அறியட்டும்.
இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விடத் தோற்பது கண்ணியமானது என்பதைக் கற்றுக் கொடுங்கள்.
எத்தனைபேர் கூடி தவறு என்று சொன்னாலும், சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள்.
துன்பப்படும் போது அவன் சிரிக்கட்டும். அத்துடன் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.
குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும். இனிமையாகப் பேசுபவரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் சொல்லிக் கொடுங்கள்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதைத் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனை பழக்குங்கள்.
எப்போதும் எதிலும் ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.
இவையெல்லாம் மிகப் பெரிய கடினமான நடைமுறைகள் தான். ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். ஏனெனில் இனிமையான என் மகன் மிகவும் சிறியவன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! 25,000 -யை நெருங்கும் நிஃப்டி!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


