""வீடுகளில் மீன் வளர்ப்பு என்பதை நாம் வாஸ்து என்கிறோம். இது சீனாவில் பெங்சூய் கலையின் ஓர் அம்சமாகும். உலகிலேயே அதிக சென்சிட்டிவான உயிரினம் மீன்தான். பொதுவாக தற்போது நான்கு வகை மீன்களே வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. அரோனா, பிளவர் ஹார்ன், கோல்டன் பிஷ் மற்றும் கோய் என்பவையே அவை. மீனை திபெத்தியர்களும், சீனர்களும் தெய்வமாக வழிபடுகின்றனர். அதனால், உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இந்த வளர்ப்பு மீன்களுக்கு ஒவ்வொரு விதமான மரியாதை உள்ளது. இந்த நான்கு வகை மீன்களும், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ஆற்று மீன்களாகும். அங்குதான் இந்த மீன்களை வாஸ்து மீன்களாகவும் நம்புகின்றனர்.