மலையும், பசுமை போர்த்திய காடுகளும் சூழ்ந்த கிராமம் பெட்டமுகிலாளம் ஊராட்சி. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள இந்த ஊராட்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.
அடிப்படை வசதிகள் இல்லாத இந்தக் கிராம மக்களைத் தேடிச் சென்று, குறிப்பாக நகரப் பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலையிலுள்ள
முதியவர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் முடிதிருத்தி வருகிறார் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ். இதுகுறித்து அவர் கூறியது:
""நகரங்களுடன் தொடர்பில்லாத பெட்டமுகிலாளம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் ஒரு முடிதிருத்தகம் கூட கிடையாது. இங்கு வசிப்பவர்கள்
முடி வெட்ட வேண்டும் என்றால் 27 கி.மீ. பயணித்து தேன்கனிக்கோட்டைக்கும், 18 கி.மீ. தொலைவிலுள்ள மாரண்டஹள்ளிக்கும் செல்ல வேண்டும்.
இங்கு செல்ல நேரடி சாலை வசதி இல்லையென்றாலும் அதிகக் கட்டணம் செலுத்தி சரக்கு வாகனத்தில் பயணிக்க வேண்டும். சில நேரங்களில் காட்டு
யானைகளின் குறுக்கீடும் இருக்கும்.
கடந்த 20 ஆண்டுகளாக மலைக் கிராமங்களுக்கு நானே நேரடியாகச் சென்று அங்குள்ள முதியவர்கள், சிறுவர்களுக்கு முடிவெட்டி வருகிறேன்.
ஒரு நாளைக்கு ஒரு கிராமம் என்ற கணக்கில் சுழற்சி முறையில் சென்று வருகிறேன். இதற்காக ரூ.10 மட்டுமே கூலியாகப் பெறுகிறேன்.
சில கிராமங்களுக்குச் செல்ல சாலை வசதி இல்லை. இருப்பினும், அங்கு நடந்து செல்வதை எனது வாடிக்கையாளர்களுக்காக சிரமமாகக்
கருதுவதில்லை.
எனக்கு இதனால் கிடைக்கும் வருவாய் சொற்பம்தான் என்றாலும், மலைக் கிராம மக்களுடன் பழகி விட்டதால் ஆத்ம திருப்தி தரும் இந்தத்
தொழிலை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன்'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


