ஆதிவாசிகளின் ஆதிவைத்தியம்!
ஆந்திர ஆதிவாசிகளின் ஆதிவைத்தியத்தின் மூலம் நாள்பட்ட வியாதிகள் குணமாக்கப்படுகிறது. இயற்கையான உணவு, ரம்மியமான சூழல், சீரான வாழ்க்கைமுறை அந்தகால மனிதர்களை நூறு ஆண்டுகள் வாழவைத்தது.


ஆந்திர ஆதிவாசிகளின் ஆதிவைத்தியத்தின் மூலம் நாள்பட்ட வியாதிகள் குணமாக்கப்படுகிறது. இயற்கையான உணவு, ரம்மியமான சூழல், சீரான வாழ்க்கைமுறை அந்தகால மனிதர்களை நூறு ஆண்டுகள் வாழவைத்தது.
""ஏதாவது நோய்கள், அதற்கான மருந்துகளுடன் நடமாடும் மருத்துவமனையாக மாறிவரும் சூழல். நோயின்றி வாழ ஒரே வழி பக்கவிளைவுகள் எதுவும் இல்லாத பச்சிலை மூலிகை மருந்துகள்’’ என்கிறார் ஆந்திரத்தை சேர்ந்த ஆதிவாசியான கே.லட்சுமணராஜ்.
காட்டுப் பகுதிகளில் காணப்படும் மூலிகைகளைப் பக்குவப்படுத்தி பொடி, கஷாயம் செய்து உட்கொண்டால் நோய்கள் பஞ்சாய் பறந்து போகும் என்கிறார் அவர்.
பெங்களூர், கே.ஆர்.புரம், பசவண்ணபுரம் சாலையில் ஸ்ரீகனகதுர்கா மூலிகை வைத்தியசாலை வைத்துள்ள லட்சுமணராஜ், பச்சிலை மூலிகை மருத்துவத்தில் 20 ஆண்டுகால அனுபவம் கொண்டவர்.
இதுகுறித்து லட்சுமணராஜ் கூறியது:
""ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டம், கந்தஸ்ரீகிராமம் தான் எனது சொந்த ஊர். நாங்கள் ஆதிவாசிகள். எங்கள் பாட்டன் ஜமாலுராஜ், காட்டில் வாழ்ந்தவர். அவரது கைப்பக்குவத்தின் மூலம் மூலிகை மருந்துவத்தை கற்றுத் தேர்ந்த எனது தாத்தா மல்லையாராஜ், தந்தை கிருஷ்ணராஜ் ஆகியோரை தொடர்ந்து நானும் மூலிகை மருத்துவம் செய்துவருகிறேன்.
சூடு, வாதம், பித்தம், ஒவ்வாமை, ஆஸ்துமா, மூலம், சர்க்கரை நோய், மூட்டுவலி, ரத்தக்கொதிப்பு, குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, தோல்நோய், புற்றுநோய், ஆண்மை கோளாறு, சிறுநீர் கோளாறு போன்ற 361 வகையான நோய்களுக்கு மூலிகை மருந்துகள் உள்ளன. மூலிகை வேர், பச்சிலையால் தயாரிக்கப்படும், பொடி, கஷாயம், மாத்திரைகளை நோயாளிகளுக்குத் தருகிறோம்.
எங்கள் கிராமத்தில் என் தாத்தா காலத்தில் காட்டுப் பகுதியில் 300 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரப்பட்டது. அதில் அரியவகை மூலிகை வேர்கள், பச்சிலைகள் கிடைக்கின்றன. அங்கிருந்து பெறப்படும் வேர்கள், மூலிகைகளைத்தான் மருந்தாக தருகிறோம். நாள்பட்ட நோய்களை தீர்க்கும் வல்லமையும் மூலிகைகளுக்கே உண்டு. எங்கள் வைத்திய முறையில் நாடிபார்த்து நோய்களைக் கண்டுபிடிப்போம். அதே சமயம் நாடிபார்த்து சர்க்கரை நோயைக் கண்டறிய முடியாது. ரத்தத்தில் சர்க்கரை அளவைத் தெரிவித்தால், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிப்போம். எங்கள் மருந்தில் ரசாயனக் கலவை கிடையாது. வனதுர்கா தேவியை குலதெய்வமாக வழிபடும் நாங்கள், அமாவாசை காலங்களில் ஒருவரின் முகம் பார்த்தே ஜோதிடமும் சொல்வோம்’’ என்கிறார்
லட்சுமணராஜ்.
-ந. முத்துமணி
படம்: ச.கார்த்திகேயன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...