நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இது வேறு கேக்!

தீபாவளி என்றாலே பட்டாசும், பக்ரீத் என்றாலே பிரியாணியும் நினைவுக்கு வருவதைப்போல, கிறிஸ்துமஸ் என்றாலே கேக்தான் நினைவுக்கு வரும்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:23 pm

ஏ. பேட்ரிக்

தீபாவளி என்றாலே பட்டாசும், பக்ரீத் என்றாலே பிரியாணியும் நினைவுக்கு வருவதைப்போல, கிறிஸ்துமஸ் என்றாலே கேக்தான் நினைவுக்கு வரும்.
 கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் கேக்கிற்கு அப்படியொரு முக்கிய பங்குண்டு. நாம் அறுவடை திருவிழாவாக தை மாதத்தில் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறோம். ஆனால், அந்த அறுவடைக் காலத்தையே வரவேற்பதைப்போல 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியர்களும் விழா எடுத்து சிறப்பித்துள்ளனர்.
 தங்கள் நிலங்களில் விளைந்த பழங்களையும், முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகளையும் அடுத்த அறுவடைக்காலம் வரை பாதுகாக்கும் வகையில் ஓர் உணவாகத் தயாரித்து பாதுகாத்து வைத்துக் கொள்வார்களாம். அவை கெட்டுப் போகாமலிருக்க திராட்சை ரசம் மற்றும் மது வகைகளையும் கலந்து விடுவார்களாம். இவை இரண்டும் இருப்பதால் அந்த உணவு கெட்டுப்போகாது என்பதோடு இந்த பழச்சாறுகளிலுள்ள சர்க்கரையே இனிப்பையும் சேர்த்து விடுகிறது. இந்த உணவே கேக் என்ற பெயரையும் பெற்றுவிட்டது. வழக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கடும் பனிக்காலத்திலேயே வருவதால் உடலுக்கு இதமான உணவாகவும் கேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 இந்த கேக்கை தயாரிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாடுகிறார்கள். தொடக்கத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் இணைந்து இந்த கேக் தயாரிப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளனர். அதன் பின்னர் வர்த்தக ரீதியிலும் இவ்விழா சிறப்பிக்கப்பட்டது. அதுதான் "கேக் மிக்சிங் செரிமனி' என்பதாகும். அது தொடர்பான விவரங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் உதகையிலுள்ள "ஜெம் பார்க் ஹாலிடே இன்'னின் உணவு
 மேலாளர் பிரதீப் குமார்:
 
 ""கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கேக் இல்லாமல் இல்லை. பாரம்பரியமான கிறிஸ்துமஸ் கேக்கை தயாரிப்பதும் அவ்வளவு எளிதானதும், சுலபமானதுமல்ல. இதற்கு சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிட வேண்டும். முதற்கட்டமாக கேக் தயாரிப்பதற்கான உணவுக் கலவையை உருவாக்க வேண்டும். இந்த நிகழ்வுதான் கேக் மிக்சிங் செரிமனி எனப்படுவதாகும். சர்வதேச அளவில் இந்த முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 கிறிஸ்துமஸ் பண்டிகையும், அதைத் தொடர்ந்து வரும் புத்தாண்டும் வளமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் அமைய வேண்டுமென வாழ்த்தி கேக் தயாரிப்பிற்கான கலவை உருவாக்கப்படும். கேக் தயாரிப்பதற்கான மாவு, சர்க்கரை, பழச்சாறு, திராட்சை ரசம், பேரீச்சம்பழம், முந்திரி, பாதாம் ஆகியவற்றுடன் மது வகைகளையும் குறிப்பிட்ட அளவுகளில் கலந்து பாதுகாப்பாக வைத்துவிட்டால், குறைந்தது 50 நாட்களுக்கு பிறகு அவை கேக்காக மாற்றப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக அந்த கேக் மற்றவர்களுக்கு பரிசாகப் பகிர்ந்தளிக்கப்படும்'' என்றார்.
 ஒவ்வொரு நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஒரு தனி சுவை இருக்குமெனலாம். அதனால், பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் கிறிஸ்துமஸ் கேக்கை சுவைக்க பெரும் போட்டியே நடக்கும்.
 உதகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது கடும் உறை பனிக்காலமாகவும் இருக்குமென்பதால் ஏராளமான வெளிநாட்டவர்கள் ஆண்டுதோறும் இங்கு கூடுவர். அவர்களுக்கு பாரம்பரியமான கிறிஸ்துமஸ் கேக்கை சுவைப்பது என்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்
 கூடியதாகும்.
 நமது சிறு வயதில் பண்டிகை கொண்டாட்டங்களின்போது ஒரு வீட்டில் சமைத்த சிறப்பு உணவுகளை பக்கத்து வீடுகளுக்கு பரிமாறிக் கொள்வது வாடிக்கையானதாகவே இருந்தது. அப்போது கிறிஸ்துமஸ் என்றாலே கேக்கைத்தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், தற்போது இது வெகுவாகக் குறைந்துவிட்டது.
 கேக் என்பது ஐரோப்பியர்களின் கலா
 சாரமாக இருந்தாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும், அதிலுள்ள கேக்கும், அதை உருவாக்கும் பாரம்பரிய வழிமுறைகளும் என்றுமே பிரிக்க முடியாதவையே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.