நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பேண்டு வாத்திய இசைப் போட்டி!

பேண்டு வாத்தியம் என்றவுடன் நமக்கு ராணுவத்தினர், காவல்துறையினர் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் பேண்டு வாத்தியம் இசைத்து அணி வகுத்து நடப்பதுதான்

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:09 pm

ஏ. பேட்ரிக்

பேண்டு வாத்தியம் என்றவுடன் நமக்கு ராணுவத்தினர், காவல்துறையினர் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் பேண்டு வாத்தியம் இசைத்து அணி வகுத்து நடப்பதுதான் நினைவுக்கு வருகிறது.

தற்போது பெரும்பாலான பள்ளிகளில் பேண்டு வாத்தியம் இசைக்க கற்றுத் தரப்படுகிறது.  பேண்டு வாத்தியம் இசைக்கப்படும்போது நமக்குள் ஒரு கம்பீரம், நாட்டுப்பற்று வரும்  என்கிறார்கள் இசை வல்லுநர்கள்.

 ஐபிஎஸ்சி எனும் இந்தியன் பப்ளிக் பள்ளிகளுக்கிடையேயான கூட்டமைப்பின் சார்பில், தேசிய அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான பேண்டு வாத்திய இசைப்போட்டி, தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக உதகை லாரன்ஸ் பள்ளியில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் தகுதிச் சுற்றுகளில் தேர்ச்சி பெற்று இறுதிப் போட்டிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்த 6 பள்ளிகள் பங்கேற்றிருந்தன.

நாடு முழுதும் 79 பள்ளிகள் கொண்ட இக்கூட்டமைப்பில் இறுதிப்போட்டியில் உதகை லாரன்ஸ் பள்ளியுடன், பிலானியிலுள்ள பிர்லா பாலிகா வித்யாபீடம், ஹரியானா மாநிலம் பாஹல் பகுதியிலுள்ள பிஆர்சிஎம் பள்ளி, பெங்களூரு ராஷ்டிரிய மிலிட்டரி ஸ்கூல், நைனிடாலிலுள்ள சைனிக் பள்ளி மற்றும் ரேவாவிலுள்ள சைனிக் பள்ளி ஆகிய அணிகள் பங்கேற்றிருந்தனர்.

 ஒவ்வொரு குழுவினருக்கும் தலா 15 நிமிடம் தரப்பட்டிருந்ததது. அந்த 15 நிமிடத்தில் அவர்களது பேண்டு வாத்திய இசையை, மார்ச் பாஸ்ட் எனப்படும் அணிவகுப்பு மரியாதையுடன் நிகழ்த்த வேண்டும். 15 நிமிடத்திற்குமேல் கூடுதலாகும் ஒவ்வொரு நொடிக்கும் மைனஸ் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்பது விதியாகும்.

 கடும் போட்டியாக நிலவிய இந்த இறுதிப் போட்டியில் பிலானி பிர்லா பாலிகா வித்யாபீட அணியினர் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர். 6 பள்ளிகள் பங்கேற்றிருந்தாலும் முழுக்க முழுக்க மாணவியரைக் கொண்ட ஒரே அணி இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பரிசு உதகை லாரன்ஸ் பள்ளி அணியினருக்குக் கிடைத்தது. வெற்றி பெற்றவர்களுக்கு வெலிங்டன் எம்ஆர்சி ராணுவ மையத்தின் பிரிகேடியர் அனந்தநாராயணன் கோப்பைகளை பரிசளித்தார்.

 இப்போட்டிகள் குறித்து உதகை லாரன்ஸ் பள்ளியின் தலைமையாசிரியை சங்கீதா சீமா நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""தற்போது அனைத்து பள்ளிகளிலுமே பேண்டு வாத்தியம் கற்றுத் தரப்படுகிறது. இது வெறுமனே சம்பிரதாயத்திற்காக மட்டுமல்ல. பேண்டு வாத்தியம் மற்றும் மார்ச் பாஸ்ட் எனப்படும் அணிவகுப்பு மரியாதைகளுக்காக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு டியூனுமே ஒவ்வொரு தனித்தன்மை கொண்டதாகும். மிடுக்கான நடையுடன், கம்பீரமாக நடந்து செல்லும்போது இசைக்கப்படும் இந்த டியூன்கள் மனதில் மகிழ்ச்சியையும், பங்கேற்பாளர்களுக்கு தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துபவையாகும்.

 ஆங்கிலத்தில் கூறும்போது மோட்டிவேசன் மற்றும் ஸ்பிரிட் டு பைட் என்பார்கள். அதாவது ராணுவ வீரர்களிடையே ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதற்காகவும், ராணுவத்தை பெருமைப்படுத்துவதற்காகவும் இத்தகைய டியூன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது பள்ளி மாணவ, மாணவியரிடத்திலும் இத்தகைய ஒரு மேம்பட்ட உணர்வை ஏற்படுத்துவதற்காக பேண்டு வாத்தியம் இசைக்கக் கற்றுத் தரப்படுகிறது. இது அனைத்து பள்ளிகளிலும் ஒரு கூடுதல் சிறப்பம்சமாகவும் உள்ளது.

இந்தியாவில் மட்டும் சுமார் 500 வகையான டியூன்கள் பேண்டு வாத்திய அணிவகுப்பின்போது பயன்படுத்தப்படுகின்றன.

எங்கள் பள்ளியைப் பொறுத்தவரை கூடுதலான சிறப்பம்சமும் உள்ளது. கடந்த 1858ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, தொடக்கத்தில் ராயல் மிலிட்டரி ஸ்கூல் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.

அப்போது ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய பேண்டு வாத்திய சிறப்பு அணிகலன்கள் இன்றுவரையிலும் பாதுகாக்கப்பட்டு இத்தகைய பேண்டு வாத்திய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன. பழமை மாறாமல், புதிய சூழலுக்கேற்றவாறு தற்போது பேண்டு வாத்தியப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.