டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அற்புத சேவகர்கள்!

நாடகக் கலைஞர்கள் நாடகத்தில் நடிக்கிறார்கள் என்பது பெரிய விஷயமல்ல. அல்லது ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக மாணவர்கள் நடிக்கிறார்கள் என்பதும் செய்தியல்ல. ஆனால், ஆசிரியர்கள் அதுவும் குறிப்பாக தங்கள் துறை சார்ந்த விமர்சனங்களையும் முன்வைத்து

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:30 am

சா. ஜெயப்பிரகாஷ்

நாடகக் கலைஞர்கள் நாடகத்தில் நடிக்கிறார்கள் என்பது பெரிய விஷயமல்ல. அல்லது ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக மாணவர்கள் நடிக்கிறார்கள் என்பதும் செய்தியல்ல. ஆனால், ஆசிரியர்கள் அதுவும் குறிப்பாக தங்கள் துறை சார்ந்த விமர்சனங்களையும் முன்வைத்து ஒரு நாடகத்தில் நடிக்கிறார்கள் என்பது உண்மையில் கவனிக்கத்தக்க ஒன்றேதான்.
 "சமூகம் சீரழிந்து இருக்கும் நிலையில், இங்கேயிருந்து வருபவர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்? ஆனால், ஆசிரியர்கள் மட்டும் ஏதோ "மேஜிக்' செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி சாத்தியம்? அதற்காக விட்டுவிட முடியுமா? சரியானதல்லவே. இதைத்தான் இந்த நாடகம் பேசுகிறது' என்று முன்னுரை வழங்கினார் நாடக இயக்குநர் பார்த்திபராஜா.
 நாடகத்தின் பெயர் "அற்புத சேவகர்கள்' (தி மிராக்கில் ஒர்க்கர்). 15 நிமிஷங்கள் நடைபெறும் இதில் நடித்தவர்கள் அத்தனை பேரும் திருச்சி எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான "பகிர்தல் நாள்' விழாவில் இந்த நாடகம் அரங்கேறியது.
 "ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூக்கல... ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூக்கல...' சில பத்தாண்டுகளுக்கு முன் சிறுவர்கள் விளையாண்ட விளையாட்டு. இப்போது எங்கும் காண முடியவில்லை.
 பாட்டுப்பாடிக் கொண்டே விளையாடியவர்களில் ஒருவர் "ஏன் பூக்கவில்லை?' என்ற கேள்வியை எழுப்புகிறார்.
 "பொய்யில் ஊறி, அவமானத்தில் சிக்கி, யாராவது உதவுவார்கள் என்று இருந்து, மதிப்பீடுகளை மறந்து, முகமும் முகவரியும் மறந்து இருக்கும் மனிதர்கள்- எப்படிப் பூப்பார்
 கள்?' என்று கேள்வியுடன் விடையைத் தருகிறார்
 மற்றொருவர்.
 அடுத்த காட்சி, வீடு. குறைந்த வருமானத்தைக் காட்டி சான்றிதழ் பெற்ற அசதியில் வருகிறார் குடும்பத் தலைவர்- அப்பா. ஏன் குறைத்துக் காட்ட வேண்டும்? எனக் கேட்கிறார் மகன். இந்த நேரத்தில்தான் கடன் கொடுத்தவர் செல்போனில் அழைக்க, மனைவியிடம் கொடுத்து இல்லையெனத் தெரிவிக்கச் சொல்கிறார்.
 பேசி சமாளித்து முடிந்ததும், "இந்தக் கடன்காரனுங்க தொந்தரவு தாங்க முடியல' என்ற கமெண்ட் வேறு. மகன் சுற்றுலா செல்ல பணம் கேட்கிறார். செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய மகள் பணம் கேட்கிறார். புடவை சீட்டுக்கு பணம் கேட்டு மனைவி!
 அடுத்த காட்சி, அரசியல் மேடை. தொண்டர் அடிப்பொடிகளின் முழக்கங்களுடன் மேடை ஏறிய அரசியல்வாதி, கூட்டத்தைக் கண்டு அதிசயிக்கிறார். பணம், குவாட்டர், கோழி பிரியாணி விவரத்தை "அள்ளக்கை' சொல்லிவிட, இப்போது இந்தச் செலவே அதிகரித்திருக்கிறது என்கிறார் அரசியல்வாதி.
 "என்ன செய்ய, முன்பெல்லாம் லட்சங்களில் அடித்தோம், இப்போது கோடிகளில்... மக்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது' என விளக்கி, சமாதானம் அடைகிறார் அவர்.
 மாணவர்கள் அரசியலுக்கு வருவது பற்றி "அள்ளக்கை' சொல்ல, அரசியல்வாதி பேசுகிறார்: "மாணவர்களுக்கு முக்கியமான வேண்டுகோள். நாங்க படிக்க வந்தோமா? இல்லையில்ல.. நீங்க அரசியலுக்கு வரலாமா? அவங்க அவங்க அந்தந்த இடத்திலேயே இருக்கணும்'.
 இறுதிக் காட்சி. "பூப்பறிக்க வருகிறோம், வருகிறோம்... எந்த மாதம் வருகிறீர், எந்த மாதம் வருகிறீர்?' மீண்டும், மறந்து போன இன்னொரு விளையாட்டு. அப்போதுதான் பூச்சி பிடித்த பூச்செடி, மணம் வீசாத காகிதப்பூ போன்ற விளக்கங்களுக்குப் பிறகு, நல்ல விதை இல்லாததுதான் பிரச்னை என விவாதம் தொடங்குகிறது.
 "ஆசிரியர் என்ன மந்திரவாதிகளா? எல்லா மாணவர்களையும் அப்படியே மாற்றிவிட' என்கிறார் ஒருவர். "உண்மைதான் ஆனால் அப்படியே விட்டுவிட முடியுமா?' என்கிறார் இன்னொருவர்.
 "மாணவர்கள் அறிவுரைகளை ஏற்பதில்லை என்பது சரிதான். ஆனால், அவர்கள் தங்களின் ஆசிரியர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கிறார்கள். வெறும் அறிவுரைகளைச் சொல்வதைவிட, எப்படி இருக்க வேண்டும் என்பதை அப்படியே வாழ்ந்து காட்ட வேண்டும்' என்கிறார்.
 "புதிய பூக்களை மலர்விக்க, மந்திரவாதிகளே எழுக' என்ற முழக்கத்துடன் முடிகிறது நாடகம்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.