சினி மினி
சன் டி.வி.யின் முன்னாள் செயல் அதிகாரி சாக்ஸ் அண்மையில் ரஜினிகாந்தை சந்தித்து ஓர் அதிரடித் திட்டத்தைக் கூற, சூப்பரே "ச்சும்மா அதிர்ந்து'விட்டாராம். "எனக்கு முப்பது நாள் மட்டும் கால்ஷீட் கொடுங்கள்;


சன் டி.வி.யின் முன்னாள் செயல் அதிகாரி சாக்ஸ் அண்மையில் ரஜினிகாந்தை சந்தித்து ஓர் அதிரடித் திட்டத்தைக் கூற, சூப்பரே "ச்சும்மா அதிர்ந்து'விட்டாராம். "எனக்கு முப்பது நாள் மட்டும் கால்ஷீட் கொடுங்கள்; ஒரு நாளைக்கு ரூ.8 கோடி என முப்பது நாள்களுக்கு ரூ.240 கோடி சம்பளம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஜப்பான் ஆகிய மொழிகளில் படத்தை வெளியிடலாம்' - இதுதான் அந்தத் திட்டம். அதைக் கேட்ட ரஜினி, இவ்வளவு சம்பளம் கொடுத்து பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுத்தால் எப்படி வசூல் செய்வீர்கள்? என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவியுங்கள். பிறகு பார்க்கலாம் எனக் கூறி அனுப்பினாராம்.
விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வரும் அஜித், அதையடுத்து "சிறுத்தை' சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். "வெற்றிகொண்டான்' என இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கிறார் சிம்பு. "தல'க்கு ஏற்ற கதையைத் தயார் செய்தால் இப்போது "வாலு'க்கும் கதையைத் தயார் செய்யச் சொல்கிறாரே என இறுக்கத்தில் இருக்கிறார் இயக்குநர்.
"சுட்ட பழம்' என்ற படத்தைத் தயாரித்து நடித்த மோகன், அதற்குப் பிறகு நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் களமிறங்குகிறார். படத்தை எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் இயக்குகிறார்.
பாலிவுட்டில் பிஸியாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளப் படவுலகில் தன்னைப் பற்றி வரும் பாஸிட்டிவ், நெகட்டிவ் செய்திகளைச் சேகரித்து வருகிறார் அஸின். இதற்காக ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தினரையும் தனக்கு வேண்டிய சில பத்திரிகையாளர்களையும் நியமித்துள்ளார் அஸின்.
ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால் ஆகிய நான்கு ஹீரோக்களை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார் சுந்தர்.சி. இந்த ஹீரோக்களுடன் இணைந்து நடித்த நடிகைகள் பலர் இந்தப் புதிய படத்தில் நடிக்க இப்போதே நடிகர்களிடம் வாய்ப்புக்காக தூது விட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான்கு இளம் ஹீரோக்கள் நடிக்கும் இந்தப் படத்தில் காமெடி வில்லனாக நடிக்கவிருப்பவர் சந்தானம்.
சமீரா ரெட்டிக்கு தூக்கத்தில் எழுந்து நடக்கும் பிரச்னை இருந்தது. தீவிர சிகிச்சை மேற்கொண்டு பூரண குணமடைந்தார். ஆனால் இப்போது மீண்டும் அந்தப் பிரச்னையில் தவிக்கிறார். "தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்துவிட்டு இப்போது வாய்ப்பு குறைந்துவிட்டதால்தான் இந்தப் பிரச்னை; அதனால் முடிந்தவரை யோகா, தியானம் செய்து ரிலாக்ஸ்டாக இருங்கள்' என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மணிரத்னத்தின் "கடல்' படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் துளசி (ராதாவின் இளைய மகள்), அந்தப் படம் வெளியாகும் முன்பே "யான்' என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குகிறார். "கடல்' படம் வெளியாகும் வரை துளசியின் ஸ்டில்களை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளார் மணிரத்னம்.
சிம்புதேவனின் உதவியாளர் நவீன் இயக்கும் புதிய படம் "மூடர் கூடம்'. ஓவியா கதாநாயகியாக நடிக்க, புதுமுகங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்காக 1963-ம் ஆண்டு எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான "பொம்மை' படத்தின் சூப்பர் ஹிட் "நீயும் பொம்மை நானும் பொம்மை' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. ஒரிஜினல் பாடலைப் பாடிய ஜேசுதாúஸ, புதியவர் நடராஜன் சங்கரன் இசையில் இந்த ரீமிக்ஸ் பாடலையும் பாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...