சினி மினி
மகள் ஜானவியை எப்படியாவது கதாநாயகி ஆக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குநர்களிடம் பேசி வருகிறார் ஸ்ரீதேவி. அதோடு விரைவில் ஒரு தொலைக்காட்சித் தொடரையும் தய


மகள் ஜானவியை எப்படியாவது கதாநாயகி ஆக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குநர்களிடம் பேசி வருகிறார் ஸ்ரீதேவி. அதோடு விரைவில் ஒரு தொலைக்காட்சித் தொடரையும் தயாரிக்கவுள்ளார். "மை டியர் மங்காத்தா' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியலில் ஸ்ரீதேவியின் தங்கையும் முன்னாள் நடிகையுமான மகேஸ்வரி கதாநாயகியாக நடிக்கிறார்.
குடும்ப உறவின் மேன்மைகளைச் சித்திரித்து நடிகை ரேவதி இயக்கிய 'தங்க் ஆன்ண்ப்க்ண்ய்ஞ் ஜ்ட்ங்ழ்ங் ற்ட்ங் ள்ன்ய் நங்ற்ள்' ஆவணப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து ஒரு புதிய படத்துக்கான ஸ்கிரிப்ட்டை உருவாக்கியுள்ளார். ஹிந்தியில் உருவாகும் இந்தப் படத்துக்கான கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் ரேவதி.
பாடகர் மனோவின் மகன் ஷாகிர் "நாங்க' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். இதையடுத்து மகனைக் கதாநாயகனாக்க ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறார் மனோ. இதற்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். யார் இயக்கினாலும் இளையராஜாதான் இசை என்கிறார் மனோ.
கண்ணி வெடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற "நோ மேன்'ஸ் லேண்ட்', "ஹர்ட் லாக்கர்' பட வரிசையில் "மிதி வெடி' என்ற பெயரில் சர்வதேசத் தரத்தில் ஒரு தமிழ்ப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஈழப் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளின் தன்மை, அவற்றில் எதிர்பாராமல் சிக்கிக்கொள்ளும் அப்பாவி மக்கள் ஆகியோரைப் பற்றி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆஸ்திரேலிய வாழ் தமிழர் ஆனந்தமயூர் ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். டேனியல் பாலாஜி, நீலிமா ராணி ஆகியோர் இலங்கைத் தமிழில் பேசி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
"தி ஆர்ட்டிஸ்ட்' படத்துக்காக சிறந்த நடிகர் விருது பெற்ற ழான் டுஜார்டினுக்கு ஆஸ்கர் விருதை வழங்கியவர் ஹாலிவுட்டின் பிரபல நடிகை நடாலியா போர்ட்மேன். அந்த விருது வழங்கும் விழாவின்போது நடாலியா அணிந்திருந்த சிவப்பு நிற அங்கி போன்று தோற்றமளித்த உடை அரங்கிலிருந்தவர்களையும் தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சியைப் பார்த்த பலரையும் கவர்ந்தது. அந்த உடையை லண்டனைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் 50 ஆயிரம் டாலருக்கு (ரூ.25 லட்சம்) ஏலத்தில் எடுத்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ரேர் வின்டேஜ் என்ற கடையில் விழா நாளன்று அவசர அவசரமாக அந்த உடையை வாங்க நடாலியா செலவிட்டது இந்திய மதிப்பில் சில ஆயிரங்களும் 30 நிமிடங்களும்தானாம்.
"ஆதிபகவன்' படத்தை முடிக்காமல் இழுத்துக்கொண்டே போவதாக படத்தின் நாயகன் ஜெயம் ரவி, இயக்குநர் அமீர் மீது வருத்தத்தில் இருக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு வித்தியாசமான "கெட்-அப்'களில் நடிப்பதால் அதை மாற்றிவிட்டு வேறு புதிய படங்களுக்கு கால்ஷீட் தர முடியாததே ஜெயம் ரவியின் வருத்தத்துக்குக் காரணம்.
அஜித்தின் "பில்லா 2' படத்தின் ஆடியோ தயாராகிவிட்டது. இருந்தாலும் பாடல் சி.டி.யை ரஜினிதான் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் அஜித். இதற்காக ரஜினியிடமும் பேசியிருக்கிறார். "கோச்சடையான்' படத்துக்காக லண்டன் சென்றுள்ள ரஜினி சென்னை திரும்பியவுடன் பாடல் வெளியீட்டு விழா விமரிசையாக நடக்கும் என்கிறது படக்குழு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...