திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமையல் எள் அடை

தேவையானவை: பச்சரிசி- 500 கிராம், உளுத்தம் பருப்பு-200 கிராம், புழுங்கல் அரிசி-100கிராம், கடலைமாவு-100கிராம், வேர்க்கடலை- 100 கிராம், எள்- 100 கிராம், நெய்-100 கிராம், எண்ணெய்-250 கிராம், மிளகாய்த்தூள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:23 am

தேவையானவை: பச்சரிசி- 500 கிராம், உளுத்தம் பருப்பு-200 கிராம், புழுங்கல் அரிசி-100கிராம், கடலைமாவு-100கிராம், வேர்க்கடலை- 100 கிராம், எள்- 100 கிராம், நெய்-100 கிராம், எண்ணெய்-250 கிராம், மிளகாய்த்தூள்- சிறிதளவு, உப்பு-தேவையான அளவு

 செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து உலர்த்தி மாவாக ஆக்கி சலித்து வாணலியில் போட்டு வறுக்கவும். உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். புழுங்கல் அரிசியை அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் நீரை வடிகட்டியெடுத்த அரிசியை வறுக்கவும். புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக இடித்து மாவாக்க வேண்டும். கடலைமாவையும் தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அரிசிமாவுடன் இந்த மூன்று மாவையும் கலந்து நெய்,எள், பொடி செய்யப்பட்ட வேர்க்கடலை, உப்பு, சிறிது மிளகாய்ப்பொடி ஆகியவற்றை மாவுடன் சேர்த்துக் கிளற வேண்டும். தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கெட்டியான மாவாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாகச் செய்து ஒரு வாழை இழையில் வைத்து வட்டமாகத் தட்டிக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொரித்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.