சினி மினி
"கடல்' படத்தின் நாயகிகளாக கார்த்திகா, சமந்தா, துளசி என பலர் மாறிக்கொண்டேயிருக்க, இன்னொரு நாயகியான லட்சுமி மஞ்சு (தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள்) சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகரித்து அவருடைய கதாபாத்த


"கடல்' படத்தின் நாயகிகளாக கார்த்திகா, சமந்தா, துளசி என பலர் மாறிக்கொண்டேயிருக்க, இன்னொரு நாயகியான லட்சுமி மஞ்சு (தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள்) சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகரித்து அவருடைய கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறார் மணிரத்னம்.
"வழக்கு எண் 11/9' படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் அந்தப் படத்துக்கு என தனியாக சம்பளம் எதுவும் கேட்கவில்லை. காரணம்... இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படத்தின் கதை விவாதம் தொடங்கியபோதே பாலாஜிக்கு சென்னையில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிக்கொடுத்துவிட்டார் லிங்குசாமி. படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் அண்மையில் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து கெüரவித்திருக்கிறார் லிங்குசாமி.
ரஜினிகாந்த் நடிக்கும் "கோச்சடையான்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரம்மாண்டமாக நடத்த படத்தைத் தயாரிக்கும் ஈராஸ் மற்றும் மீடியா ஒன் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஐந்து பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து. இதில் ஒரு பாடலை ரஜினிகாந்த் பாடியுள்ளார். இதற்கிடையில் "கோச்சடையான்' படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமையை மிகப் பெரிய தொகைக்குப் பெற்றிருக்கிறது ஜெயா டி.வி.
"கள்ளத்துப்பாக்கி' படக்குழு தொடுத்த டைட்டில் உரிமை வழக்கில் விஜய் நடிக்கும் "துப்பாக்கி' டைட்டிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. டைட்டில் பிரச்னை நீடிக்கும் பட்சத்தில் படத்துக்கு "போக்கிரி 2' என பெயரை மாற்றலாமா என யோசித்து வருகிறது விஜய் தரப்பு.
ரிச்சா கங்கோபாத்யாயாவை நேரில் சந்தித்துப் பேட்டி கேட்டால் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறார். சரி... மொபைல் ஃபோனில் பேசி எடுக்கலாம் என்றால் ""ஃபோனில் எதற்கு? என் இ மெயில் ஐ டி யை குறித்துக்கொள்ளுங்கள். மெயிலிலேயே "சேட்' செய்தவாறு பேட்டியை வைத்துக்கொள்ளலாம்'' என்கிறார்.
சிம்பு நடிக்கும் "வாலு' படத்துக்கு ஐம்பது நாள்கள் கால்ஷீட் ஒதுக்கித் தந்திருக்கிறார் சந்தானம். இதற்காக அவருக்கு மொத்தமாக ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. படத்தைத் தயாரிக்கும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி "சம்பளத்தை இன்னும் குறைத்துக் கொள்ள முடியுமா?''எனக் கேட்டிருக்கிறார். "எனக்கு சினிமாவில் ஆரம்பத்தில் வாய்ப்பளித்து திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்தது சிம்புதான். அதற்காகத்தான் இவ்வளவு குறைவான சம்பளம்' எனக் கூறியிருக்கிறார். உண்மைதான்... தற்போதைய நிலவரப்படி ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூ.10 லட்சத்திருந்து ரூ.12 லட்சம் வரை பெறுகிறார் சந்தானம்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் "நிமிர்ந்து நில்'. அமலா பால் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் ஜெயம் ரவி - தந்தை, மகன் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். ஐம்பது வயதைக் கடந்த தந்தை கதாபாத்திரம், கமல்ஹாசனின் "நாயகன்' வேலுநாயக்கர் "கெட்-அப்'பில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...