சினி மினி
அடிக்கடி செல்ஃபோனை மாற்றுவது போலவே தனது மேனேஜர்களையும் மாற்றி வருகிறார் அமலாபால். இதுவரை எட்டுப் பேரை நீக்கியுள்ள அமலாபால் தற்போது ஒன்பதாவதாக ஒரு புதிய மேனேஜரை நியமித்துள்ளார். அதிக சம்பளம் வாங்கும்


அடிக்கடி செல்ஃபோனை மாற்றுவது போலவே தனது மேனேஜர்களையும் மாற்றி வருகிறார் அமலாபால். இதுவரை எட்டுப் பேரை நீக்கியுள்ள அமலாபால் தற்போது ஒன்பதாவதாக ஒரு புதிய மேனேஜரை நியமித்துள்ளார். அதிக சம்பளம் வாங்கும் நடிகை, ராசியான நடிகை, பிஸியான நடிகை என்பது போலத்தான் பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும்; கிசுகிசு வரவே கூடாது என்பதுதான் மேனேஜருக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை.
விஜய் இயக்கும் "தாண்டவம்' படத்தில் விக்ரம் ரா உளவுப்பிரிவு அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் திருப்புமுனையான காட்சிகளில் பார்வையற்றவராக வரும் விக்ரம் மாற்றுத்திறனோடு சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளார். இதற்காக, எதிரொலி மூலம் சுற்றுப்புறத்தை உணரும் ஆற்றல் கொண்டவரும் பார்வையுடையவர்களே செய்யத் தயங்கக்கூடிய பல அரிய சாதனைகளை உலக அளவில் நிகழ்த்தியவருமான அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் க்ரூஸ் என்ற மாற்றுத்திறனாளியிடம் ஒரு மாதம் பயிற்சி எடுத்துள்ளார் விக்ரம். படத்தின் நாயகி அனுஷ்காவுக்கு வித்தியாசமான வேடம் என்றாலும் விக்ரமுக்கு சமமாக ஆக்ஷனில் அசத்தியுள்ளவர் "மதராசப்பட்டணம்' எமி ஜாக்சன்.
அக்டோபர் மாதம் லண்டனில் பிரமாண்டமான ஓர் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார் இளையராஜா. இதில் அவருடைய படங்களில் பாடிய அனைத்து பின்னணிப் பாடகர்களும் கலந்துகொண்டு இசை மழையைப் பொழியவுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையைப் பெற முக்கிய சேனல்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன.
சில படங்களில் ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவது போல சில காட்சிகளில் நடித்துள்ள பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ், "தெருவு நட்சத்திரங்கள்' என்ற மலையாளப் படத்தில் ஒரு பாடலைப் பாடும் தனி கதாபாத்திரமாக நடிக்கிறார்.
தங்களது திருமண நிகழ்ச்சியை தனியார் சேனலுக்கு பெரிய தொகைக்கு விற்றது, ஆடி மாதம் தம்பதிகளைப் பிரித்து வைக்கும் தமிழ் மரபைக் கூட ஒரு செல்ஃபோன் விளம்பரம் மூலம் காசாக மாற்றியது என ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது செய்து பணத்தையும் பப்ளிசிட்டியையும் தேடி வருகிறது சினேகா-பிரசன்னா ஜோடி. அந்த வரிசையில் இன்னொன்று... அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ ஒன்றில் இந்த ஜோடி கலந்துகொண்டது. திருமண வாழ்க்கை பற்றி செய்தியாளர்கள் கேட்க... ""எனக்கு பிரசன்னாவின் மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை'' என்றார் சினேகா. சற்று உன்னிப்பாக "என்ன?'' என்று கேட்டால்... ""ஆமாம். எனக்கு பிரசன்னாவின் மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை; பிரசன்னாவின் காதலியாக இருக்கத்தான் பிடிக்கிறது'' என்று கூறி தன் டிரேட் மார்க் சிரிப்பை (இதற்கு எந்த கம்பெனி ஸ்பான்சரோ) உதிர்த்தார் சினேகா.
"நாடோடிகள்' படத்தை ஹிந்தியில் "ரங்ரேஷ்' என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன். இந்தப் படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 1996-ல் வெளியான "சிறைச்சாலை' படத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் படம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...