சினி பிட்ஸ்
* சிம்பு, ஜெய் என இளம் நடிகர்களில் பெரும்பாலானோர் அஜித்தின் தீவிர ரசிகர்கள். மாதத்துக்கு ஒரு முறை சிலரை அழைத்துப் பேசி சந்தோஷமாக இருப்பது அஜித்தின் வழக்கம். அரசியல், சினிமா என அனைத்தையும் கலகலப்பாக ப


* சிம்பு, ஜெய் என இளம் நடிகர்களில் பெரும்பாலானோர் அஜித்தின் தீவிர ரசிகர்கள். மாதத்துக்கு ஒரு முறை சிலரை அழைத்துப் பேசி சந்தோஷமாக இருப்பது அஜித்தின் வழக்கம். அரசியல், சினிமா என அனைத்தையும் கலகலப்பாக பேச, அமைதியாக அமர்ந்து கேட்பார்களாம் இளம் ஹீரோக்கள். சினிமாவில் ஹீரோவான பின்னர் தன் ஒவ்வொரு பிறந்த நாளையும் அஜித் இல்லாமல் கொண்டாட மாட்டார் சிம்பு. ஜெய் என்றால் அஜித்துக்கு அவ்வளவு சந்தோஷம். ""நான் "அமரவாதி' படத்தில் நடிச்சப்போ உன்னை மாதிரிதான் இருந்தேன்''னு சொல்லி தலைக் கோதி சிரிப்பாராம் அஜித்.
* தான் முதன் முதலாக வாங்கிய "ஸ்கார்ப்பியோ' காரை இன்னும் தன் மதுரை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் வடிவேலு. காரைத் துடைத்து சுத்தப்படுத்துவது அவரது வழக்கமான பணிகளில் ஒன்றாக இப்போது இருக்கிறது. ""செருப்பு இல்லாமல் நடந்த சென்னைத் தெருக்கள்ல, இந்த காரில்தான் முதன் முதலாக போனேன்''னு நண்பர்களிடம் சொல்லிக் கலங்குவார். எப்போதும் எம்.ஜி.ஆரின் பாடல்களிலேயே நீந்துவார் வடிவேலு. 100-க்கும் அதிகமான பாடல்களை அப்படியே பாடி அசத்துவார்.
* இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இதுவரை செல்போனைப்
பயன்படுத்தியதே இல்லை. ""எப்படி இங்கு வந்தேனோ, அப்படியே இருக்கிறேன். எதுவும் என்னை மாற்றவில்லை'' என இது பற்றி அடிக்கடி சொல்லுவார். காலை மற்றும் மாலை வேளைகளில் பெசன்ட் நகர் வீட்டுக்குப் போன் செய்தால் "ஓம் முருகா' எனச் சொல்லி போன் எடுப்பது எம்.எஸ்.வி.தான். ""எல்லோரும் நல்லா இருக்கணும், சந்தோஷம் எங்கும் நிரம்பட்டும்'' என அன்பு வழியப் பேசி தன் பேச்சை முடிப்பார்.
* புதுமுகம் கண்ணன் இயக்கும் "கரிகாலன்' படத்தில் விக்ரமுக்கு ஜோடி பாலிவுட் நடிகை ஜரீன்கான் ராதிகா ஏப்த். இந்தியில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் நான்கு படங்கள் ஹிட்டாக, முதன் முதலாக தமிழுக்கு வருகிறார். மற்றொரு ஹீரோயினாக இப்படத்தில் நடிக்கிறார் மித்ரா சூரியன்.
* சரித்திர காலப் படங்கள் இப்போது தமிழ் சினிமாவின் புது டிரெண்ட். ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் "ராணா', சிம்புதேவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் "மாரீசன்', விக்ரம் நடிப்பில் உருவாகும் "கரிகாலன்' ஆகிய படங்கள் சரித்திரப் பின்னணியைக் கொண்டு உருவாகுகின்றன.
* சென்னை வரும் நாள்களில் நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர்த்து சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள தன் பழைய வீட்டில் தங்குவதை அதிகம் விரும்புவார் நடிகை ஸ்ரீதேவி. எங்கும் மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த வீட்டில், ஸ்ரீதேவி இருந்தால் சந்தோஷம் பொங்கும். மின்சாரம் இருந்தாலும், இரவு நேரங்களில் சில இடங்களில் எரியும் மெழுகுவர்த்தி மிகவும் சிறப்பு. போனிகபூரை மணம் முடித்துக் கொண்ட பின், சி.ஐ.டி. காலனியில் இரண்டு பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். அப்போதெல்லாம் அந்த வீட்டில் தங்கியிருந்தது ஸ்ரீதேவியின் சித்தி மகள் "உல்லாசம்' மகேஸ்வரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...