விடுதலை குயிலே...
""சின்னதாகச் சில சம்பவங்கள். அதைச் சுற்றி முழுக்க முழுக்கக் கற்பனை. அதுதான் சினிமாவாக இருக்க முடியும். இதுவும் அப்படித்தான். வாழ்க்கையில் நீங்களும், நானும் சந்திக்கிற உயிரோட்டமான சம்பவத்தின் பின்னணியி


""சின்னதாகச் சில சம்பவங்கள். அதைச் சுற்றி முழுக்க முழுக்கக் கற்பனை. அதுதான் சினிமாவாக இருக்க முடியும். இதுவும் அப்படித்தான். வாழ்க்கையில் நீங்களும், நானும் சந்திக்கிற உயிரோட்டமான சம்பவத்தின் பின்னணியில் கற்பனையைக் கலந்து செய்த கதை இது.
இப் படத்தில் எழுபது சீன்கள் இருக்குன்னா, ஒரு மனுஷன் தன் வாழ்க்கையில் அவன் சந்தித்த சம்பவம் முப்பது சீனாவது இருக்கும். இதில் வரும் நாயகன் சந்தித்த விஷயங்களை, நாம சந்தித்துவிடக் கூடாதுன்னு எச்சரிக்கிற கதைதான் இந்த "அய்யன்'. "நான் உருவாகவில்லை. உருவாக்கப்பட்டவன்' என்ற சேகுவேராவின் வார்த்தைகள் இந்தப் படத்தின் மையம்'' என்று நிதானித்துப் பேசி முடிக்கிறார் புதுமுக
இயக்குநர் கேந்திரன் முனியசாமி.
யதார்த்த பட டிரென்டில் இதுவும் சேர்ந்திடும்தானே?
நிச்சயம். இதில் நிறைய யதார்த்தம் இருக்கிறது. இந்தக் கதைக்கான தேவையும் அதுதான். கதைக் களம் நான் பிறந்து வளர்ந்த இராமநாதபுரம் மாவட்டம். எப்போதும் வறுமை. எப்போதாவது செழுமை. இந்த மாதிரியான ஒரு களத்தில் இளைஞனின் காதலை, கோபத்தை அது தந்த வாழ்க்கையைச் சினிமாவாக்கி முடிச்சிருக்கேன்.
சொல்லப்படுகின்ற களம் இதை இன்னும் யதார்த்தமாக்கியிருக்கிறது. இது முழுக்க முழுக்க கிராமத்து இளைஞர்களுக்கான படம். இப்போது இளைஞர்களின் வாழ்க்கை எந்தப் பெற்றோர்களின் கையிலும் இல்லை. வாழ்க்கையை அவனும், அவனது நண்பர்களும்தான் தீர்மானிக்கிறார்கள். வெவ்வேறான வாழ்க்கைச் சூழல். நகர வாழ்க்கையைவிட மோசமான சூழல் இப்போது கிராமங்களில் இருக்கிறது. பீர் குடிக்கிற 15 வயசுப் பையனை இப்போது போனாலும் கிராமத்து டாஸ்மாக் கடை வாசலில் நீங்கள் பார்க்கலாம்.
இளைஞர்களிடம் இப்போது போராடும் குணமும், தன்னம்பிக்கையும் இல்லை. அதுவெல்லாம் ஒருவனுக்கு இருந்தால் கிராமம் எப்படி மாறும் என்று சொல்லியிருக்கிறேன். அதனால் இதில் கொஞ்சம் அரசியலும் இருக்கிறது.
சமீபத்திய அறிமுக இயக்குநர்கள் யாருமே கவனத்தை ஈர்க்க வில்லையே?
சின்ன ஆளோ, பெரிய ஆளோ சொல்ல வருகிற விஷயத்தை கரெக்டா சொன்னாதான் எடுபடும். ஆடியன்ûஸ நாம எப்போதுமே எமாற்றிவிட முடியாது.
இத்தனை வருஷ வரலாற்றில் தப்பான சினிமா ஒண்ணு ஓடியிருக்கான்னு சொல்லுங்க? எது சரியோ அதை நிச்சயம் ஆதரிப்பாங்க. ஆடியன்ஸþக்கு எல்லாமே தெரியும். சரியான சினிமாவுக்கு மட்டும்தான் உரிய மரியாதை கொடுப்பாங்க. நல்ல சினிமா, கெட்ட சினிமான்னு தரம் பிரிக்கிற அனுபவம் அவங்களுக்கு நிறைய இருக்கு. நானும் சினிமாவைத் தரம் பிரிச்சு பார்த்தவன்தான். பி, சி சென்டரில் நல்ல வசூல்ன்னு வியாபாரத்துக்காக எதையாவது சொல்லிட்டுப் போகலாம்.
அந்தச் சினிமா காலம் கடந்து நிற்காதுன்னு எல்லோருக்கும் தெரியும். இது முதல் படம். வழக்கமான சினிமாவின் பாடு பொருள்கள் எதுவும் இல்லை. என் சினிமா நல்லாயிருக்கும்ன்னு உத்திரவாதத்தை என்னால் மட்டுமே தரமுடியும்.
இளையராஜா இசையாமே?
இந்த மாதிரி படத்துக்கு அவர் மட்டுமே பலம். படம் பார்த்ததும், ""படம் நல்லாயிருக்கு. காலகட்டத்துக்கு ஏற்ற சினிமா கொடுத்திருக்க''ன்னு சொல்லி என்னைப் பக்கத்திலேயே வெச்சுக்கிட்டு இசை ராகம் கொடுத்தார். வாலி, மு.மேத்தா, சிற்பி பாலசுப்பிரமணியம், நா.முத்துக்குமார், கபிலன், சினேகன் பாடல் எழுதியிருக்கிறார்கள். கிளைமாக்ஸில்
""விடுதலைக் குயிலே...
விடுதலைக் குயிலே..
விடுதலைஇதுதானா..''ன்னுஇளையராஜா பாடும் போது உங்க மனசு லேசாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...