தேவையானவை:
பேகிங் பவுடர்- 1 தேக்கரண்டி, முட்டை-5
மைதாமாவு-250 கிராம்
வெனிலா எசன்ஸ்- சில துளிகள்
வெண்ணெய்-250 கிராம்
சர்க்கரை-300 கிராம், ஜாம்-2 மேஜைக்கரண்டி
சர்க்கரைப் பூச்சு செய்யத் தேவையானவை:
பச்சைக் கலர்-6 சொட்டு
தண்ணீர்- 3 மேஜைக்கரண்டி
ஐஸிங் சர்க்கரை- 300 கிராம்
ரான்பெர்ரி ரெட்- 4 சொட்டு, இலவங்கம்-2
செய்முறை: வெண்ணெயும், சர்க்கரையும் ஒன்றாகச் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும். மைதாமாவு, பேகிங் பவுடர் ஒன்றாகக் கலந்து இருமுறை சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அடித்த முட்டையை வெண்ணெய் குழைத்த கலவையில் சிறிது சிறிதாகவிட்டு அடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இக்கலவையில் எண்ணெய் சில துளிகள் விட்டுக்கொள்ள வேண்டும். அதன் பின்பு மைதா மாவைக்கலவையில் சேர்த்து மெதுவாகக் கலக்க வேண்டும். கேக் சூட்டில் வைக்கும்போது சுமார் 35 நிமிடங்கள் வரை வேகவிட வேண்டும். நன்றாக கேக் வெந்தததும் எடுத்து சூட்டைத் தணிய வைத்து கேக்கை நன்றாகத் தூள் செய்து கொள்ள வேண்டும். உதிர்ந்த கேக்குடன் ஜாம் கலந்துகொண்டு நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். இதை கெட்டியாக பந்துபோல உருட்டிக் கொள்ள வேண்டும். இந்தக் கேக்கின் மீது சர்க்கரைப்பூச்சு செய்ய வேண்டும்.
முதலில் நீர், பச்சைகலர், சர்க்கரை இவற்றைக் கெட்டியாக கரண்டியினால் கலந்துகொள்ள வேண்டும். இக்கலவையை அடுப்பில் வைத்து கைபொறுக்கும் சூடு ஆனவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும். பின்பு உருட்டி வைத்திருக்கும் கேக்கை, ஒரு பாகத்தில் மட்டும் தோய்த்து அதை ஒரு பேப்பர் கப்பில் தோய்ந்த பாகம் மேலே தெரியும்படி வைக்க வேண்டும்.ஆப்பிள் போல தெரிய சிறிது ராஸ்பெர்ரி ரெட் கலரை பிரஷ்ஷில் எடுத்து கேக்கின் மேல் சிறிது தடவிவிட வேண்டும். ஒரு லவங்கத்தைக் கேக்கின் காம்புபோன்று பதிய வைக்க வேண்டும். இப்போது பார்த்தால் காம்புடன் கூடிய ஆப்பிள் கேக் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


