சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கிலாத்தி மீன்

கூட்டம், கூட்டமாகப் பவளப்பாறைகள் உள்ள பகுதிகளில் தனி சாம்ராஜ்யம் அமைத்துக் கொண்டு வசிப்பவைதான் கிலாத்தி மீன்கள். வண்ண மீன் வளர்ப்போர் இதன் நீச்சலடிக்கும் அழகுக்காக இதனை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்ற

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:28 pm

சி.வ.சு. ஜெகஜோதி

கூ ட்டம், கூட்டமாகப் பவளப்பாறைகள் உள்ள பகுதிகளில் தனி சாம்ராஜ்யம் அமைத்துக் கொண்டு வசிப்பவைதான் கிலாத்தி மீன்கள். வண்ண மீன் வளர்ப்போர் இதன் நீச்சலடிக்கும் அழகுக்காக இதனை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். கிலாத்தி மீனின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..

""இதன் விலங்கியல் பெயர் பாலிஸ்டிடே என்பதாகும். பெரும்பாலும் பவளப்பாறைகளைச் சார்ந்தே வாழும் குணமுடையவையாக இருந்தாலும் அதை விட்டு அதிக தூரம் செல்லாது. பவளப் பாறைகளின் அடிப்பகுதியில் துவாரம் அமைத்து அதனை தன் பாதுகாப்பு வாழிடமாகவும் பயன்படுத்திக் கொள்கிறது.

துப்பாக்கியிலிருந்து தோட்டா வெளியேறுவதற்கு டிரிக்கர் எனப்படும் ஒரு சிறு இரும்பு செயல்படுவதைப் போல இம்மீனின் உடலில் நடுவில் குறுக்காக ஒரு மெல்லிய அதே நேரத்தில் சற்று உறுதியான எலும்பு ஒன்றும் உள்ளது. எதிரி மீன்களிடமிருந்து பாதுகாக்க டிரிக்கர் போன்ற இந்த எலும்பு உதவுவதால் இதனை ஆங்கிலத்தில் டிரிக்கர் பிஷ் என்கிறார்கள்.

சில சாதுவானதாகவும் சில கோபம் உடையதாகவும் இருக்கின்றன. சில நேரங்களில் கடலுக்குள் நீச்சலடிக்கும் ஸ்கூபா டைவர்ஸ்களை ஆக்ரோஷமாக துரத்தி தாக்கவும் செய்யும். சுமார் 25 செ.மீ வரை வளரும் இவ்வுயிரினங்கள் சிப்பி, சங்குகளை விரும்பி உண்ணும் வகையில் தாடையும், பற்களும் இயற்கையாகவே அமைந்திருக்கின்றன. இந்தியக் கடல் பகுதியில் 4 வகைகள் தான் அதிகமாகக் காணப்படுகின்றன.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பெரும்பாலும் சிவப்பு வாய் கிலாத்தி மீன்களே கடலுக்குள் பவனி வருகின்றன. கேரளாவில் விழிஞ்சம், குளச்சல் பகுதிகளில் இம்மீன்கள் மீனவர்களால் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவக்காற்று வீசும் காலங்களில் இழுவலைகளில் அதிகமாகச் சிக்கிக் கொள்ளும் இந்த மீன்கள் இறந்து போய் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. அதனை அவர்கள் காயவைத்து கோழித்தீவனத்துக்கு மூலப்பொருளாகவும் அனுப்பி

வைக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான முட்டைகளை இடும் இந்த உயிரினம் தனது வால்துடுப்பால் நீச்சலடித்து கடலுக்குள் செல்லும் அழகே அழகு. பொதுவாக கடலில் திரியும் எந்த மீன்களும் தனது பக்க துடுப்புகளைப் பயன்படுத்தியே நீந்தும். ஆனால் கிலாத்தி மீன்களோ வால் துடுப்பால் நீந்துவதால் இது மற்ற மீன்களிடமிருந்து மாறுபட்டு காணப்படுவது இதன் தனிச் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.