சினிமா சானியா!
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸôவை சினிமாவில் நடிக்க வைக்க பாலிவுட்டில் கடும் போட்டி நிலவியது. ஆனால் சானியா விளம்பரப் படங்களோடு நிறுத்திக்கொண்டார். அவர் சினிமாவில் நடிக்காவிட்டாலும் தற்போது அவரு


பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸôவை சினிமாவில் நடிக்க வைக்க பாலிவுட்டில் கடும் போட்டி நிலவியது. ஆனால் சானியா விளம்பரப் படங்களோடு நிறுத்திக்கொண்டார்.
அவர் சினிமாவில் நடிக்காவிட்டாலும் தற்போது அவருடைய வாழ்க்கையைக் குறிப்பாக திருமண அத்தியாயத்தை மட்டும் பாலிவுட்டில் சினிமாவாக எடுக்கிறார்கள். சானியாவுக்கும் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.
ஏற்கெனவே தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த முகமது சோரப் மிஸ்ரா என்பவரை உதறித்தள்ளி விட்டு மாலிக்கை மணமுடித்தார் சானியா. இதற்கிடையில் மாலிக் தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டார் என ஆயிஷா என்ற பெண் புகார் அளித்திருந்தார். இந்த சர்ச்சையை மையமாக வைத்து "ஹைதராபாத்தி தாமத்' என்ற பெயரில் புதிய படம் உருவாகிறது.
மும்பையைச் சேர்ந்த பி.கிராக் படத்தைத் தயாரிக்க ஜெயபிரகாஷ் என்பவர் இயக்குகிறார். அமர் உபாத்தியாயா, டெபினா பானர்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதுபற்றி சானியாவிடம் கேட்டால்...
""இது முழுக்க முழுக்க அந்த இயக்குநரின் கற்பனைக் கதையாகத்தான் இருக்கும். என்னுடைய திருமண விஷயத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது சிலருக்கு மட்டும்தான் தெரியும். இந்தப் படத்தை மீடியா செய்திகளின் அடிப்படையில் மட்டும் எடுத்தால் அதில் உண்மை இருக்காது'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...