மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்!
சினிமாவை உயிரா நினைக்கிற ஒவ்வொருத்தருக்கும், ஒரு பீரியட் ஃபிலிம் செய்யணும்னு கனவு இருக்கும். அந்த மாதிரியான ஒரு கனவின் பிரதிபலிப்புதான் இந்தப் படம். ரசிகர்களின் ரசனை மாற்றமும் காலத்துக்கு ஏற்ப மாறிக்க


சினிமாவை உயிரா நினைக்கிற ஒவ்வொருத்தருக்கும், ஒரு பீரியட் ஃபிலிம் செய்யணும்னு கனவு இருக்கும். அந்த மாதிரியான ஒரு கனவின் பிரதிபலிப்புதான் இந்தப் படம். ரசிகர்களின் ரசனை மாற்றமும் காலத்துக்கு ஏற்ப மாறிக்கிட்டே இருக்கு. அந்த ரசனை மாற்றத்தை இந்த "மதராசப்பட்டினம்' நிச்சயம் கொடுக்கும்'' ஆர்வமாக பேசுகிறார் இயக்குநர் விஜய்.
முழுப் படம் முடிந்தநிலையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
திருப்தியா இருக்கு. உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைச்சிட்ட உணர்வு வந்திருக்கு. ரசிகர்களின் ரசனை நாளுக்கு நாள் மாறிக்கிட்டே இருக்கு. திறமை இருந்தால் தகுந்த இடம் கொடுத்து தலையில் தூக்கி வைக்கவும், புதுமை இல்லைன்னா எவ்வளோ பெரிய ஆளாக இருந்தாலும் நிராகரிக்கிற கூட்டமும் இங்கேதான் இருக்கு. அவர்களையெல்லாம் திருப்திபடுத்துற அளவுக்குப் படம் அமைஞ்சிருக்கு. எதையும் விமர்சிக்கிற ரசிகர்கள் இதை நிச்சயம் ரசித்து விமர்சிப்பார்கள் என நம்பிக்கை வந்திருக்கு.
பீரியட் படத்தைச் சீக்கிரம் முடித்த விட்டது போல் தெரிகிறது?
1945-ல் இருந்த சென்னையை அப்படியே காட்சிபடுத்தியிருக்கோம். இதற்குப் பின்னால் பட்ட கஷ்டங்கள் நிறைய இருக்கு. தூக்கமில்லாத உழைப்பு, நம்ம வரலாற்றை நாமே தப்பாக சொல்லிடக் கூடாதுங்கற பயம், இந்த தலைமுறை பார்த்திராத சென்னையை மீட்டெடுத்து காட்சிப்படுத்த வேண்டும் என்கிற தேடல்... எல்லாமே இதில் இருக்கு. தூய்மையான, அழகான சென்னையை நாம் இழந்து விட்டோம். அழகா, அற்புதமா இருந்த சென்னையை அழுக்காக்கின பெருமை நம்மையே சாரும். நமக்கு முன்பிருந்த தலைமுறை வாழ்ந்த சென்னையையும் அதில் உள்ள அழகான காதலையும் காட்டப் போகிறோம்.
"மதராசப்பட்டினம்' என்ன கதை?
1945}ம் வருடம் தான் கதையின் களம். அந்தக் காலகட்ட சென்னை பின்புலத்தில்தான் கதை அமைந்திருக்கிறது. சுதந்திரத்தை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் வரவேற்ற விதம் ஒவ்வொரு மாதிரி இருந்தது.
ஆங்கிலேயருக்கு எதிராக வெளிநாட்டினரின் ஆதரவைத் திரட்ட ஜெர்மன் சென்ற நேதாஜி, யாருக்கும் தெரியாத அகிம்சை வழியில் காந்தி.. எனப் போராடியவர்களுக்கு மத்தியில் "சுதந்திரம் வந்துடுச்சா' எனக் கேட்கிற அளவுக்குக்கூட மக்கள் இங்கே இருந்திருங்காங்க.
அந்தக் காலகட்ட மக்களின் வாழ்க்கையைதான் இதில் பதிவு பண்ணியிருக்கேன். இதுக்கான தகவல்களை எழுத்தாளர்கள் பிரபஞ்சனும், அஜயன் பாலாவும் கொடுத்தார்கள். வெறும் சுதந்திரத்தின் பதிவுகள் மட்டுமே இதில் இருக்காது. காதலும் அது தருகிற வலியையும் உணரலாம்.
ஆர்யாவுக்கு மிஸ் டீன் வேர்ல்டு ஏமி ஜாக்சன் எப்படி பொருந்தினார்?
"நான் கடவுளு'க்குப் பின் ஆர்யா சினிமாவை புதுசா, வித்தியாசமா பார்க்கிறார். சினிமாவை வெறித்தனமா நேசிக்க ஆரம்பிச்சிருக்கார். அந்த வெறித்தனத்தை எப்படி வேண்டுமானாலும் வளைக்க முடிந்தது. மல்யுத்த வீரராக வர்றார். இளம்பரிதினு கூப்பிட்டாதான் திரும்பி பார்ப்பார்.
அப்படி படத்தோட ஒன்றி போயிருந்தார். பிரிட்டீஷ் பெண் ஏமி ஜாக்சன்தான் ஆர்யாவின் காதலி. தான் வாங்கிய புது கேமிராவில் படம் பிடிக்க சென்னை வரும் ஜாக்சன் ஆர்யாவைக் காதலிக்கிறார். நம்ம பக்கத்து வெயில், கொசு என எல்லாத்தையும் தாங்கிட்டு நடிச்சிருக்கார். தமிழ் சினிமா இந்தக் காதலைப் புதுசா பார்க்கும்.
பாடல்கள் ஹிட்டாகி இருப்பதைப் பற்றி?
என் ஆஸ்தான கவிஞர் நா.முத்துக்குமாரும் ஜி.வி.பிரகாஷ்குமாரும்தான் இதற்கு காரணம். நான் நினைக்கிறதை அப்படியே பாடலாக்கித் தந்தார் நா.முத்துக்குமார். அதற்கு இசை கோர்த்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார் ஜி.வி.பிரகாஷ்குமார். "இதுதான் பாட்டு' என இசை வெளியீட்டு விழாவில் ஆச்சரிய வார்த்தைகளை வீசினார் கமல்.. அப்படீனா பார்த்துக் கொள்ளுங்கள்.
தமிழ் சினிமாவில் பீரியட் படங்கள் அதிகரித்து வருகிறதே?
நல்ல விஷயம்தானே? சினிமாவை உயிரா நினைக்கிற எல்லோருக்குமே ஒரு பீரியட் ஃபிலிம் கனவா இருக்கும். "இம்சை அரசன் 23-ம் புலிகேசி' போன்ற படங்கள் வந்து நம்மை சந்தோஷப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
மற்ற சினிமாக்களில் பீரியட் சினிமா அதிகரித்திருக்கிறது. கமர்ஷியல் சினிமாக்களை வைத்துக் கொண்டு எத்தனை காலம்தான் பயணம் செய்வது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...