சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வைகை பாலத்துக்குக் கீழே...!

"மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் மூலம் முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துள்ள ராசு மதுரவன் அடுத்து இயக்கும் புதிய படம் "கோரிப்பாளையம்'. இந்தப் படத்தையும் யுனைடெட் ஆர்ட்ஸ் பட நிறுவனமே தயாரிக்கிறது

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:30 pm

மனோஜ் கிருஷ்ணா

"மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் மூலம் முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துள்ள ராசு மதுரவன் அடுத்து இயக்கும் புதிய படம் "கோரிப்பாளையம்'. இந்தப் படத்தையும் யுனைடெட் ஆர்ட்ஸ் பட நிறுவனமே தயாரிக்கிறது. "உங்களுடைய முந்தைய படங்களான "பாண்டி', "மாயாண்டி குடும்பத்தார்' போல இதுவும் சென்டிமெண்ட் படமா என கேட்டபோது...

  ""மதுரையிலுள்ள முக்கியமான பகுதிகளுள் கோரிப்பாளையமும் ஒன்று. அங்குள்ள வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் நடைபெறும் ஒரு சம்பவம் ஓர் இளைஞனைப் பாதிக்கிறது. அதன்பிறகு அவனுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. கதையைத் தயார் செய்த பிறகே அதற்கேற்ற நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம்.

இதில் முன்னணி நடிகர்கள் சிலர் நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கருதியதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. படத்தில் வன்முறை, ஆபாசம் இருக்காது.

எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் சினிமாவையும் சென்டிமெண்ட்டையும் பிரிக்க முடியாதது. அதனால் "கோரிப்பாளையம்' படத்திலும் அர்த்தமுள்ள சென்டிமெண்ட் விஷயங்களுக்குப் பஞ்சம் இருக்காது'' என்றார் இயக்குநர் ராசு மதுரவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.