வெட்கம் அறியாள்!
ஜெயமதி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் "பயம் அறியான்' படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சனுஜா அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். "கால்ஷீட் குளறுபடிதான் காரணமா?' என இயக்குநர் பிரதீஷிடம்


ஜெயமதி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் "பயம் அறியான்' படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சனுஜா அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். "கால்ஷீட் குளறுபடிதான் காரணமா?' என இயக்குநர் பிரதீஷிடம் கேட்டபோது...
""சனுஜா கால்ஷீட் பிரச்னையெல்லாம் செய்யவில்லை. குறித்த நேரத்துக்கு வந்துவிடுவார். இந்தப் படத்தில் அவருக்கு நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வகையில் மிகவும் அருமையான கேரக்டர். ஆனால் அவருக்கு நடிப்பு வரவில்லை. குறிப்பாக, வெட்கப்படும் காட்சிகளில் அதற்கேற்ற முகபாவனையை வெளிப்படுத்தவில்லை. பல டேக் வாங்கினார். பலமுறை சொல்லிப் பார்த்தோம். "எனக்கு இவ்வளவுதான் நடிக்க வரும்; இதற்கு மேல் என்னால் முடியாது' எனத் தெளிவாகக் கூறிவிட்டார். அதனால் அவருக்குப் பதிலாக உதயதாராவைக் கதாநாயகியாக்கியுள்ளோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...