மெருகு தந்த மூச்சுப் பயிற்சி!
"தோரணை' எடுபடாவிட்டாலும் தான் நடித்துள்ள "கந்தசாமி', "ஜக்குபாய்' படங்களை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார் ஸ்ரேயா. இரண்டு படங்களிலும் மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறேன் என்று கூறும் ஸ்ரேயாவிடம் ""எப்


"தோரணை' எடுபடாவிட்டாலும் தான் நடித்துள்ள "கந்தசாமி', "ஜக்குபாய்' படங்களை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார் ஸ்ரேயா. இரண்டு படங்களிலும் மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறேன் என்று கூறும் ஸ்ரேயாவிடம் ""எப்படிப்பட்ட வேடமாக இருந்தாலும் க்ளாமரை மட்டும் கைவிட மறுக்கிறீர்களே?' எனக் கேட்டால்...
""இன்றைய சூழ்நிலையில், பெரிய நகரங்களில் சினிமாவில் வருவதைவிட பலர் க்ளாமராக உடை அணியத் தொடங்கியிருக்கிறார்கள். "மழை' படத்திலிருந்தே என்னை க்ளாமர் நடிகை என முத்திரை குத்திவிட்டார்கள். அப்படியிருந்தாலும், நான் இதுவரை க்ளாமராக நடித்த காட்சிகளில் எந்தக் காட்சியாவது முகம் சுளிப்பது போல் இருக்கிறதா? அதுதான் என்னுடைய க்ளாமர் எல்லை.
தவிர, என்னுடைய உடல் அமைப்புக்குப் புடவை சரிப்பட்டு வராது. மாடர்ன் உடைகள்தான் பொருத்தமாக இருக்கும். கோடிகளைக் கொட்டி படமெடுக்கும், தயாரிப்பாளரும், இயக்குநரும் க்ளாமராக நடிக்கக் கேட்டுக்கொண்டால் அதைத் தவிர்க்கவும் முடியாது.
எல்லோராலும் க்ளாமராக நடித்துவிட முடியாது. அதற்கேற்ற உடல் அமைப்பு அவசியம். அப்படிப்பட்ட உடல் அமைப்பை யோகா, மூச்சுப் பயிற்சி மூலம் மெருகேற்றி வருகிறேன்'' என்கிறார் ஸ்ரேயா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...