சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

"தல'யசைப்பு!

சரண் இயக்கத்தில் அஜீத்-சமீரா ரெட்டி நடிக்கும் "அசல்' படத்தில் கடும் பரிசீலனைக்குப் பிறகு, பாவனா இன்னொரு நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். குடும்பப்பாங்கான இந்த வேடத்துக்காக இறுதி வரை சினேகாவின

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:21 pm

மனோஜ் கிருஷ்ணா

சரண் இயக்கத்தில் அஜீத்-சமீரா ரெட்டி நடிக்கும் "அசல்' படத்தில் கடும் பரிசீலனைக்குப் பிறகு, பாவனா இன்னொரு நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். குடும்பப்பாங்கான இந்த வேடத்துக்காக இறுதி வரை சினேகாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால், பாவனாவுக்கு ஆதரவாக "தல'யசைத்ததால் அவர் நாயகியாகி விட்டார். மாஃபியா கும்பல் பற்றிய இந்தப் படத்தின் திருப்புமுனையான ஒரு சில காட்சிகளில் மட்டும் அஜீத்துடன் நடிக்க "பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கானிடம் பேசியிருக்கிறார்களாம். சிவாஜி புரொடக்ஷன்ஸýக்காகவும் அஜீத்துக்காகவும் ஷாருக் சம்மதிப்பார் என நம்புகிறது பட யூனிட். ஏற்கெனவே, சந்தோஷ்சிவன் இயக்கிய "அசோகா' ஹிந்திப் படத்தில் ஷாருக்கானுடன் சில காட்சிகளில் அஜீத் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.