மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரிதான ரத்தினம்

உலகில் கிடைக்கும் ரத்தினங்களில் மிக அரிதானது, 'கயவ்துவைட்' ஆகும். மியான்மர் நாட்டில் 2010- ஆம் ஆண்டு ஓர் ஆற்றின் கரையில் அது கண்டுபிடிக்கப்பட்டது.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 10:34 pm

உலகில் கிடைக்கும் ரத்தினங்களில் மிக அரிதானது, 'கயவ்துவைட்' ஆகும். மியான்மர் நாட்டில் 2010- ஆம் ஆண்டு ஓர் ஆற்றின் கரையில் அது கண்டுபிடிக்கப்பட்டது.

அடர் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருந்த இதனை புவியியல் ஆய்வாளர் ஆய்வு செய்தபோது, இது பூமியில் இதுவரை கிடைக்காத அரிய பொக்கிஷம் என்பதை அறிந்து கொண்டார்.

2015- இல் சர்வதேச புவியியல் அமைப்பு இந்த ரத்தினத்தை பூமியின் அரிதான வைரக்கல் என்று அறிவித்தது.

பூமி தட்டில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உருவாகும் வெப்பத் தாக்கத்தினால் மண்ணில் அரிதான வேதிவினை ஏற்பட்டு "கயவ்துவைட்' உருவாகி இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, பிஸ்மத் மற்றும் ஆண்டிமோனி என்ற இரண்டு ரசாயனங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து மிக உயர் வெப்பநிலையாக, அதாவது 450 முதல் 520 டிகிரி செல்சியஸ் வெப்ப அழுத்த சூழலில் மட்டுமே இது போன்ற கல் உருவாகும் என்று கூறுகின்றனர். மியான்மர் நாட்டின் சில பள்ளத்தாக்குகளில் மட்டுமே இதுபோன்ற ரசாயனங்கள் உள்ளன. இதனால் "கயவ்துவைட்' இங்கு மட்டுமே காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.