டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நேர்மை

வியாபாரி ஒருவன் ஒட்டகம் வாங்க சந்தைக்குப் போனான். ஒட்டக வியாபாரியிடம் பேரம் பேசி ஒட்டகத்தை வாங்கினான்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:47 am

எம். அசோக்ராஜா

வியாபாரி ஒருவன் ஒட்டகம் வாங்க சந்தைக்குப் போனான். ஒட்டக வியாபாரியிடம் பேரம் பேசி ஒட்டகத்தை வாங்கினான். வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தைக் கொட்டிலில் அடைக்கச் சொன்னான். அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயன்றான். அவனால் முடியவில்லை. வேலையாளை அழைத்து சேணத்தை அவிழ்க்கச் சொன்னான்.

ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், "பொத்' என ஏதோ கீழே விழுவதைக் கண்டு எடுத்துப் பார்த்தான். அது ஒரு சிறிய பொக்கிஷப் பை. பிரித்தான். வியப்பில் அவன் கண்கள் விரிந்தன. நவரத்தினக் கற்கள் தகதகவென மின்னின. அதை முதலாளியிடம் காண்பித்தான்.

உடனே வியாபாரி, ""அந்தப் பையை இப்படிக் கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்'' என்று சொல்லிப் புறப்பட்டான்.  பணியாளோ, ""ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்துக் கொண்டால் என்ன?'' என்றான். 

வியாபாரி அவன் சொன்னதைக் கேட்காமல் புறப்பட்டுப் போனான்.

ஒட்டக வியாபாரியிடம்  நடந்ததைச் சொல்லி  அந்தப் பொக்கிஷப் பையைக் கொடுத்ததும் நன்றியோடு வாங்கிக் கொண்டவன், அதை வியாபாரியிடம் கொடுத்து, ""உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்குப் பிடித்தமான கற்கள் சிலவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று நீட்டினான்.

அதற்கு அந்த வியாபாரியோ சிரித்துக்கொண்டே, ""உங்களிடம் இந்தப் பொக்கிஷத்தைத் தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் எடுத்து வைத்துக் கொண்டேன்'' என்றான்.

உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணிப் பார்த்தான். எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.

உடனே அந்த வியாபாரி, ""நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்... எனது நேர்மை,  எனது சுயமரியாதை'' என்றான் கம்பீரமாக.

நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும் கிடைத்தாலும் அப்போதும் நேர்மையாக வாழ வேண்டும். வாழ்வில் ஒரு நாள் நேர்மையாய் வாழ்ந்து பார்த்தால், அதன் ருசி உணர்ந்துவிட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.