மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காக்கை  சொன்ன பாடம்!

குயில், மரத்தில் இருந்தபடிபாட்டுப் பாடுது;  சின்னக்குருவிகளும் கிளையில் இருந்து

News image
Updated On :18 ஏப்ரல் 2020, 11:49 am

குயில், மரத்தில் இருந்தபடி
பாட்டுப் பாடுது;  சின்னக்
குருவிகளும் கிளையில் இருந்து
பாட்டுக் கேட்குது;

மயில், தனது தோகை விரித்(து)
ஆடிக் காட்டுது; வேப்ப
மரம், தனது கிளைகள் ஆட்டிப்
பூக்கள் தூவுது;

பயில்வதற்குப் பள்ளிசெல்லும்
பிள்ளைகள் போலே வெகு
பரபரப்பாய் எறும்புக் கூட்டம்
விரைந்து போகுது!

வெயில், மிகுந்து தரையைச் சூடு
ஆக்கிவிட்டது ; நிழல்
விரித்த மரக் கூட்டத் தாலே
காற்றும் வந்தது!

காற்று வந்து சொன்ன சேதி
கேட்டுக் கொண்டுதான் அந்தக்
காக்கை கூட்டம் ஊர் முழுக்கக்
கத்திச் சொல்லுதே!

"நேற்றுப் போல, இன்றும் வீட்டில்
இருக்க வேண்டுமாம் தொற்று
நோய்ப டர்ந்து பரவி டாமல்
காக்க வேண்டுமாம்!

"காகா" "காகா"  என்று காக்கை
கத்தும் ஓசைதான் நம்மைக்
காக்கும் நல்ல மந்திரமாம்"
கிளியும் சொல்லுது!

ஆகா, இந்தக் காக்கை சொன்ன
படி எல்லாரும்  நாம்
அவரவரின் வீட்டுக்குள்ளே 
அடங்கி வாழ்வோமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.