

காட்டில் மரத்தின் மீதொரு
பறவைக் கூடு இருந்ததாம்.
கூட்டுக் குள்ளே குஞ்சுகள்
கூட தாயும் வாழ்ந்ததாம்.
அன்று வனத்தில் திடீரென
அதிகத் தீயும் பிடித்ததாம்
எங்கும் எதுவும் தீயினால்
எரியத் தொடங்கி விட்டதாம்.
கூட்டில் இருந்த குஞ்சுகள்
கொல்லும் நெருப்புச் சூட்டிலே
பட்டிடாமல் காத்திட
பயந்த தாயும் சொன்னதாம்:
""உங்கள் உயிரைக் காத்திட
ஒன்று சொல்வேன் கேளுங்கள்
இங்கு உள்ள எலிப்பொந்துள்
எடுத்து வைப்பேன் உங்களை.
தீயின் வெம்மை தீர்ந்ததும்
திரும்ப வந்து கூட்டுள்ளே
எடுத்து வைத்து விடுகிறேன்''
என்று தாயும் சொன்னதாம்.
தாயைக் காக்க குஞ்சுகள்
தாமும் விருப்பம் கொண்டதால்,
உன்தன் உயிரைக் காத்துக்கொள்
ஓடி விடுவாய் என்றன.
தாயும் வருந்திப் பறந்தது
தாவி நெருப்பு சூழ்ந்தது
தீயைப் பார்த்துத் துணிவுடன்
தீர்க்க மாகக் குஞ்சுகள்:
""எங்கள் அன்புத் தெய்வமே!
எரியும் அக்கினி தேவனே!
உங்கள் அன்பு பிள்ளைஎம்
உயிரைக் காக்க வேணுமே,
எம்மைப் பெற்ற தாயையும்
இரக்கம் கொண்டு காக்கணும்
என்று கேட்டுக் கொண்டதால்
எரிக்க வில்லை நெருப்புமே!
வெம்மை தீர்ந்து ஓய்ந்ததும்
விரைந்து தாயும் வந்ததாம்
கூட்டுக் குஞ்சுகள் தாயினைக்
கொஞ்சிக் கொஞ்சி மகிழ்ந்ததாம்!
உண்மை அன்பு என்றுமே
உலகில் வெல்லும் நம்புங்கள்
நன்மை செய்ய நினைப்பவர்
நலிவ தில்லை உலகிலே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்
கடின உழைப்பு... வளமான எதிர்காலம்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

