/

கதைப் பாடல்: தடக்...தடக்...

சத்தம் தையல் கடையிலேதுணியை வெட்டி சட்டையாய்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:51 pm

வசீகரன்

தடக்...தடக்...தடக்...
சத்தம் தையல் கடையிலே
துணியை வெட்டி சட்டையாய்
தையல் காரர் தைக்கிறார்!

கையும் காலும் மேலும்
கீழும் அசைந்து ஓடுது!
ஊசி தேடி துணியும்
பணிந்து தவழ்ந்து ஓடுது

கிழித்த இடம் ஒன்று
சேர்ந்து உருவம் எடுக்குது
கற்பனை ஒரு வடிவெடுத்து
புதிய சட்டை ஆகுது

ஆடைபாதி ஆளும் பாதி
என்பார் இந்த உலகிலே
வித விதமாய் உருவாகுது
அழகழகாய் ஆடைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.