/

தவளை!

குண்டு குண்டு தவளையாம்குளத்தில் வாழும் தவளையாம்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:28 am

வளர்கவி

 குண்டு குண்டு தவளையாம்
 குளத்தில் வாழும் தவளையாம்
 உண்டு கொழுத்த தவளையை
 ஓடி வந்து பாருங்கள்!
 
 முட்டை போன்ற கண்களும்
 முதுகு வளைந்த தோற்றமும்
 கிட்ட வந்து பார்த்திட
 கிடைக்கும் மகிழ்ச்சி கோடியே!
 
 புழுக்கள் பூச்சி தின்றிடும்
 புயலைப் போலப் பாய்ந்திடும்
 அழுக்கு மிக்க நீரிலும்
 அமைதியாக நீந்திடும்.
 
 வம்பு செய்யும் வாயினால்
 வலியச் சென்று பாம்பிடம்
 துன்பப் பட்டுச் செத்திடும்
 துடுக்குத் தவளை பாவமே!
 

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.