லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பலூன் செய்திகள்!

1794-ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாடு முதன்முறையாக பலூன்களை யுத்தத்தில் பயன்படுத்தியது.

News image
Updated On :5 ஏப்ரல் 2013, 4:18 am

• 1794-ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாடு முதன்முறையாக பலூன்களை யுத்தத்தில் பயன்படுத்தியது.
 
 • 1797-ஆம் ஆண்டில் பலூனில் பறந்து சென்று முதன்முதலாகப் பாராசூட் மூலம் கீழே குதித்தார் ஆந்ரே கார்னெரின் என்ற பிரெஞ்சுக்காரர்.
 
 • 1836-ஆம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து ஜெர்மனிக்கு பலூன் மூலம் முதன்முதலாகப் பறந்து வந்தார் சார்லஸ் க்ரீன் என்ற ஆங்கிலேயர். இவர் பயணம் செய்த தூரம் 750 கி.மீ. அதற்காக அவர் செலவிட்டது 18 மணி நேரம்.
 
 • 1906-ஆம் ஆண்டில் சர்வதேச பலூன் பந்தயம் முதன்முதலாக பிரான்சில் நடைபெற்றது. அன்றிலிருந்து இரண்டாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு முன்பு வரை ஆண்டுதோறும் சர்வதேசத் தொலைதூரப் பலூன் பந்தயம் நடைபெற்று வந்தது.
 
 • 1910-ஆம் ஆண்டில் பலூனில் ஆஸ்ப்ஸ் மலையைக் கடந்தார் எட்வர்ட் ஸ்வைசர் என்பவர். இதைத் தொடர்ந்து பலூனில் ஆல்ப்ஸ் மலையைக் கடக்கும் விளையாட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள மியூரன் என்ற இடத்தில் பலூன் வீரர்கள் கூடி தங்கள் சாகசங்களை நிகழ்த்திக் காட்டுகின்றனர்.
 -தொகுப்பு:
 முக்கிமலை நஞ்சன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.