தேவையான பொருள்கள்:
நுங்கு - 4 அல்லது 5 (தோல் நீக்கியது)
நன்னாரி சர்பத் - 4 சிறு கரண்டி
எலுமிச்சம் பழம் - பாதி அளவு
சப்ஜா விதைகள் - 1 தேக்கரண்டி
இளநீர் - 1 கிண்ணம்
செய்முறை:
நுங்கின் மேல் இருக்கும் தோலை நீக்கிவிட்டு, சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாதி நுங்கை மசித்தும், மீதியை துண்டுகளாகவும் வைத்துக்கொண்டால் குடிக்கச் சுவையாக இருக்கும். நறுக்கி வைத்திருக்கும் நுங்கு, ஊறவைத்த சப்ஜா விதைகளை ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் சேர்க்கவும். அதனுடன் நன்னாரி சர்பத், எலுமிச்சைச் சாறு பிழியவும். இளநீர் ஊற்றி நன்கு கலக்கவும்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





