தேவையான பொருள்கள்:
முருங்கைக்கீரை- ஒரு கிண்ணம்
பச்சரிசி, புழுங்கல் அரிசி- தலா 200 கிராம்
துவரம் பருப்பு -100 கிராம்
கடலைப் பருப்பு, வெங்காயம் -தலா 50 கிராம்
வற்றல் மிளகாய்-10
பெருங்காயம் -ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஊறவைத்து மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு முருங்கைக் கீரையையும் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் அதில் சிறிது எண்ணெய் தடவி, இந்த முருங்கைக்கீரை அரைத்த மாவை ஒரு கரண்டி எடுத்து, அதில் தோசையாக வட்டமாக ஊற்றி, மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வெந்தவுடன் இரண்டு பக்கமும் சிவக்க வேக வைத்துவிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






