மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கேசரி, பொங்கல், அல்வா செய்யும்போது... டிப்ஸ்!

பால் பாயசம் செய்யும் போது கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்க விட்டுச் செய்தால், பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.

News image
Updated On :24 ஜனவரி 2026, 10:30 pm

பால் பாயசம் செய்யும் போது கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்க விட்டுச் செய்தால், பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.

பஜ்ஜி மாவுடன் ஒரு வெங்காயம், மூன்று பூண்டு பற்கள், சிறிது சோம்பு முதலியவற்றைப் போட்டு அரைத்துக் கலந்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.

இட்லிப் பொடி செய்யும்போது சிறிது கறிவேப்பிலையும் போட்டு மிக்ஸியில் பொடித்தால், பொடி ருசியாக இருக்கும்.

கேசரி, பொங்கல், அல்வா ஆகியவற்றைக் கெட்டியான பிறகு இறக்கக்கூடாது. கொஞ்சம் முன்னதாகவே இறக்கவேண்டும். ஆறிய பின்பு அவை சரியான பதத்துக்கு வந்து விடும்.

இரண்டு வாழைப்பழத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து, அதனுடன் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து ஏதாவது ஒரு பழஎசன்ஸ் ஊற்றிக் காய்ச்சினால் புதிய வகை பாயசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.