டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வேர்க்கடலைக் குழம்பு

ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு, அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.

News image
வேர்க்கடலைக் குழம்பு
Updated On :2 பிப்ரவரி 2026, 8:21 am

தினமணி செய்திச் சேவை

நாகஜோதி கிருஷ்ணன்

தேவையான பொருள்கள்:

வேர்க்கடலை - அரை கிண்ணம் (ஊற வைத்து, வேக வைக்கவும்)

தேங்காய்த் துண்டுகள் - 2 (அரைக்கவும்)

கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகத்தூள் - தலா ஒரு தேக்கரண்டி

புளிக் கரைசல், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு மேஜை கரண்டி

மிளகாய்த்தூள் - ஒன்றரை தேக்கரண்டி

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு, அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.

வேக வைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும், கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.