

மூக்கிரட்டைக் கீரையைக் கடைந்து சாப்பிடுவது, சர்க்கரை நோய்க்கு நல்லது.
மாங்காய் இஞ்சியை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.
நெஞ்சுச் சளி இருந்தால், முள்ளு முருங்கை இலை சேர்த்து அரைத்து, தோசை அல்லது அடைதோசை செய்து சாப்பிடலாம்.
காய்ச்சல் இருக்கும்போது புளி சேர்க்காமல், பொரிச்ச ரசம் செய்து சாப்பிடுவது நல்லது.
வாழைத்தண்டில் சமையல் செய்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கல் வராது.
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பெண்களின் கருப்பைக்கு நல்லது. மாதவிடாய்க் கோளாறும் நீங்கும்.
கரிசலாங்கண்ணித் துவையல், கறிவேப்பிலைத் துவையல் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், பார்வைத்திறன் மேம்படும். தலைமுடி நன்றாக வளரும்.
மாதுளம் பழம் சாப்பிடுவதாலும், பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதாலும் ரத்த விருத்தி ஏற்படும்.
அல்சருக்கு முட்டைக்கோஸ், வெண்பூசணி ஜூஸ் செய்து குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.
காதில் தோடு போடும் இடத்தில் அரிப்பு வந்தால், கடுக்காயை அரைத்துப் போட வேண்டும்.
சிறிது கசகசாவை மென்று தின்றால் வாய்ப்புண் குணமாகும்.
அகத்தி இலையை நீரில் போட்டு அரைத்து, அந்த ரசத்தை மூன்று வேளை சாப்பிட்டால், நாக்குப் புண் ஆறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாசி மாதப் பலன்கள் - மகரம்
வெனிலா ஸ்பாஞ்ச் கேக்
பாட்டி வைத்தியம்! மார்புச் சளி குணமாக...

இஞ்சியின் மகத்துவம் தெரியுமா?
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

