தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சப்பாத்தி மென்மையாக இருக்க இதைச் செய்யுங்கள்!

சப்பாத்திகளைத் தயாரித்து உடனே சூடாகச் சாப்பிட வேண்டும். அவற்றை மூடிவைத்துவிட்டு தேவைப்படும்போது எடுத்து சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதிகச் சுவையாக இருக்காது.

News image
Updated On :20 செப்டம்பர் 2025, 6:30 pm

சப்பாத்திகளைத் தயாரித்து உடனே சூடாகச் சாப்பிட வேண்டும். அவற்றை மூடிவைத்துவிட்டு தேவைப்படும்போது எடுத்து சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதிகச் சுவையாக இருக்காது. எனவே, சப்பாத்தியை செய்யும்போதே சிலவற்றை செய்தால் நீண்ட நேரம் அது மென்மையைக் கொண்டதாக இருக்கும்.

மாவை வெது வெதுப்பான நீரில் அல்லது சூடான பாலுடன் சேர்த்து பிசையலாம். மாவு மென்மையாகவும் சற்று ஒட்டும் தன்மையோடும் இருக்க வேண்டும்.

மாவை உருட்டுவதற்கு முன் அதற்கு சற்று ஓய்வு அளிக்கவும். மாவை ஈர துணியால் குறைந்தது 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். ஓய்வு கொடுப்பதால் மேலும் மென்மை தன்மையுடன் மாவு எளிதில் உருட்ட வரும்.

ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய் சேர்த்துப் பிசையும்போது ஈரப் பதத்தைத் தக்க வைத்துத் தரும். சப்பாத்திகளுக்கு மென்மையான சுவையையும் அளிக்கும்.

சப்பாத்தி செய்தவுடன் லேசாக அதன் மீது நெய்யை தடவி வைத்தால், புத்துணர்வுடன் இருக்கும்.

உருட்டும்போது மெதுவாகவும் சமமாகவும் உருட்டவும். அதிகமாக அழுத்தம் தர வேண்டாம். மென்மையான சீரான அடிகளால் சப்பாத்திகள் நன்கு உப்பி சமமாக வேகும். உள்ளே மென்மையாக இருக்கும். சரியான வெப்ப நிலையைப் பராமரிப்பது அவசியம். சப்பாத்திகள் தயாரானவுடன் அவற்றை ஒரு சுத்தமான துணியில் அடுக்கி உடனடியாக காற்று புகாத பாத்திரத்தில் வைக்கவும். எடுத்து பயன்படுத்தும்போது கவனமாகச் சூடுபடுத்தவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.