17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சித்த மருத்துவக் குறிப்புகள்...

சுக்கு, மிளகு, எள் ஆகிய மூன்றையும் சமஅளவு பொடி செய்து, சாப்பிட மூல நோய் குணமாகும்.

News image
Updated On :30 நவம்பர் 2025, 12:01 am IST

சுக்கு, மிளகு, எள் ஆகிய மூன்றையும் சமஅளவு பொடி செய்து, சாப்பிட மூல நோய் குணமாகும்.

ஆட்டுப்பால் வலிப்பு நோயைக் குணமாக்கும்.

வெள்ளரிக்காய் சிறுநீர் அடைப்பைக் குணமாக்கும்.

வாழைத்தண்டு சிறுநீர் கடுப்பைக் குணமாக்கும்.

கோரைக் கிழங்கு கஷாயம் காய்ச்சலைப் போக்கும்.

நொச்சி இலையைக் கொதிக்கவைத்து, அந்த நீரில் குளிக்க உடல் வாத நோய்கள் குணமாகும்.

முலாம்பழம் சிறுநீர் பிரச்னையைத் தீர்க்கும்.

மாமரத்தின் கொழுந்து இலையை கஷாயம் வைத்துக் குடிக்க நீரிழிவு நோய் கட்டுப்படும்.

கொன்றை வேர் கஷாயம் குடித்துவர மேகரணம் தீரும்.

சுண்டைக்காய் சமைத்துச் சாப்பிட மூலக்கடுப்பு தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கிச் சாப்பிட அறிவுத்தெளிவு ஏற்படும்.

தேங்காய்ப் பால் குடித்துவர வாய் உள்ரணம் குணமாகும்.

Story image

மாதுளம்பழம் கஷாயம் வயிற்றுக் கடுப்பைக் குணமாக்கும்.

வில்வ மரப் பூக்களை கஷாயம் வைத்துக் குடித்தால், குடல் வலிமை பெறும்.

நாவல் கொட்டையைப் பொடி செய்து தினமும் சாப்பிட்டுவர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

கோவைக் காயை சமைத்துச் சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும்.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஜீரணம் மேம்படும்.

வில்வ இலைப் பொடி தொண்டைக் கட்டை குணமாக்கும்.

முருங்கைப் பூவை சமைத்துச் சாப்பிட கண் எரிச்சல் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.