மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சமையல் குறிப்புகள்...

பப்பாளி, நூல்கோல் போன்றவற்றைத் துருவி தாளித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாயை அரிந்து போட்டு சமைக்கலாம்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 6:30 pm

பப்பாளி, நூல்கோல் போன்றவற்றைத் துருவி தாளித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாயை அரிந்து போட்டு சமைக்கலாம்.

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய் ஆகியவற்றை சிப்ஸ் கட்டரில் சீவிவிட்டு மோரில் உப்பு போட்டு சேர்த்து, நன்றாகப் பிழிந்து காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுவென்று இருக்கும்.

கறிவேப்பிலை வாங்கும்போது சிறிய இலைகளைக் கொண்டவைகளை வாங்கினால், மிகுந்த மணல் கொண்டதாகவும் இருக்கும். சீக்கிரமாக அறைபட்டு சுவையும் கூடுதலாகக் கிடைக்கும். நீண்ட இலைகளில் அவ்வளவாக மணல் இருக்காது.

பருப்புப் பாயசம், அரிசிப் பாயசம் போன்றவைத் தயாரிக்கும்போது, பருப்பு, அரிசி நன்றாக வெந்தவுடன் இனிப்பைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பே சேர்த்துவிட்டால் நன்றாக வேகாது. பால் பாயசத்தில் பச்சரிசி நன்றாக வேகும் முன்பே இனிப்பு சேர்த்தால் பாயசம் திரிந்துவிடும்.

இஞ்சியைத் தோல் நீக்கிட, அதை தண்ணீரில் மண் போகும் வரை கழுவி, அம்மிக்கல்லில் இரண்டு கைகளாலும் தேய்த்தாலே போதும். தோல் சுத்தமாக உரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.