நாட்டில் நன்கொடை வழங்குவதில் "நம்பர் ஒன் பெண்மணி'யாகத் திகழ்பவர் ரோகிணி நிலேகனி. இவர் 2022-ஆம் ஆண்டில் பல சமூக நலப் பணிகளுக்காக, ரூ.120 கோடி நன்கொடையை அளித்தார். 2023-இல் ரூ.170 கோடியாக நன்கொடையை உயர்த்தினார்.
எழுத்தாளரான இவர், சுற்றுச்சூழல், கல்வித் துறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரது கணவர் நந்தன் நிலேகனி, தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸின் இணை நிறுவனர். மும்பையில் பிறந்த ரோகிணி, எல்பின்ஸ்டன் கல்லூரியில் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். பத்திரிகையாளராகவும் பணியாற்றிய அவர், தற்போது "ரோகிணி நிலேகனி' அறக்கட்டளையின் பொறுப்பாளராக உள்ளார்.
இந்தியாவின் மிக இளவயது பயணிகள் விமானி என்ற பெருமையைப் பெற்றவர் சாக்ஷி கோச்சார். இவர் தனது பதினெட்டாம் வயதில் விமானிக்கான உரிமத்தைப் பெற்றார்.
ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு உள்பட்ட பர்வானூ நகரைச் சேர்ந்த இவர், முதலில் விமானப் பயிற்சியை மும்பையிலும், பின்னர் அமெரிக்காவிலும் பெற்றார். 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 21-இல் தனியாக விமானத்தில் பறந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா!

கொடைக்கானலில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் பாண்டிக்கு ஆதரவாக நடிகை ரோகிணி பிரசாரம்

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

